01
Jul
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ’ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற எளிய பூஜையுடன் படத்தின் டப்பிங் பணியை கதாநாயகன் ஏகன் தொடங்கினார். யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள 'ஹைக்கூ' திரைப்படத்தை, விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர். ஏகன், ஃபெமினா ஜார்ஜ் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இப்படம் நிறைவை நோக்கி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. டப்பிங் பணிகள் தொடங்கியது குறித்து தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து கூறியதாவது, "'ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.இயக்குநர்,…
