27
May
ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனலின் பிரம்மாண்டமான பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்ற 'யாத்திசை' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஜே. கமலகண்ணன் தயாரித்திருக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ (INA) அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படக்குழுவின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இப்படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரதிபலித்துள்ளது. இயக்குநரின் பிரம்மாண்டமான கதையை திரையில் உயிர்ப்பிக்க, அனைத்து துறைகளும் இணைந்து கடினமாக பணியாற்றியுள்ளன. சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சேயோன், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்,…
