‘சோனி விஷன் -எஸ்’ மின்சார கார்!

இனி மின்சார வாகனங்களுக்குத்தான் எதிர்காலம். இதை புரிந்துகொண்ட ஜப்பானின், ‘சோனி’ அண்மையில் ஒரு மின்சார காரின் மாதிரியை அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கிறது. ‘சோனி விஷன் -எஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாதிரி காரில், 33 வகை மின்னணு உணரிகள் உள்ளன.

அது மட்டுமல்ல, காருக்குள் இசை, ரேடியோ, வீடியோ என்று பொழுதுபோக்கு கருவிகள் அனைத்தையும் பொருத்தியுள்ளது சோனி. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடக்கும் பிரமாண்டமான நுகர்வோர் மின்னணு கண்காட்சியில், யாரும் எதிர்பாராத விதத்தில் விஷன் எஸ் மின் வாகனத்தை சோனி அறிமுகப்படுத்தியது.

காரின் வடிவமைப்பு வித்தியாசமாக இருந்தாலும், விலையுயர்ந்த, ‘போர்ஸ்ச்’ கார்களின் சாயல் இருப்பதாக விமர்சகர்கள் சொல்கின்றனர். தவிர, மின் காரின் இயந்திரப் பகுதி, கார் பாகங்களைத் தயாரிக்கும்

மேக்னாவால் உருவாக்கப்பட்டது என்பதையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் தானோ என்னவோ, சோனி தற்போதைக்கு தன் மின்சார கார் திட்டத்தைப் பற்றி விரிவாக எதையும் சொல்லாமல் மவுனம் காக்கிறது. ஆனாலும், மின் வாகனத் துறையில் நுழையப்போகிறோம் என்பதை சோனி அழுத்தமாக சொல்லவே, விஷன் எஸ் காரை அது அறிமுகப்படுத்தியுள்ளது என்பது உறுதி.

Related posts:

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமான ‘சிக்மா’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!

நடிகர் ஏகன் மற்றும் யோகிபாபு நடிக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' இசை வெளியீட்டு விழா!

விமலின் 35வது திரைப்படம் 'பெல்லடோனா' சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக 16 மொழிகளில் உருவாகிறது!

ஏர்டெல், வோடபோன், ஜியோ தங்களது புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது.!

என்னவாயிற்று தமிழர்களுக்கு? பணப்புழக்கம் ஏன் இங்கு இல்லை.?.

அக்யூஸ்ட்-- விமர்சனம் !

“வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு ஐந்து நாள் விழா நடத்துகின்றனர்”