ஏர்டெல், வோடபோன், ஜியோ தங்களது புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது.!

பல்லாயிரம் கோடி பெரும் கடனில் சிக்கி தவித்து வந்த நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் இனி தங்களால் இந்தக் கடன் சுமையைத் தாங்க முடியாது என ஒரு வழியாக கட்டண உயர்வை அறிவித்துள்ளனர். ஏற்கனவேநாட்டில் முன்னணி தொலைத் தொடர்ப்பு நிறுவங்களாக ஏர்டெல், வோடபோன், ஆகிய நிறுவங்கள் தங்களது புதிய கட்டணத்தை அறிவித்துவிட்ட நிலையில் இன்று ஜியோ தனது கட்டணத்தை அறிவித்துள்ளது.

ஏர்டெல், வோடபோன், ஆகிய நிறுவங்கள், வரும் 6 ஆம் தேதி முதல் தங்களின் புதிய கட்டண உயர்வை அமல்படுத்த உள்ளன. இந்தக் கட்டண உயர்வானது, 5 ஆண்டுகளுக்குப் பிறகு தொலைத் தொடர்பு நிறுவனங்களால் அமல்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியானது.வரும் 6 ஆம் தேதி தனது புதிய கட்டணத்தை வெளியிடுவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருந்த நிலையில், இன்று, தனது புதிய கட்டண விவரத்தை அறிவித்துள்ளது.மேலும், மற்ற நொட்வொர்க்கில் இல்லாத வகையில் NEW ALL IN ONE PLANS” என்ற புதிய திட்டத்தையும் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தி உள்ளது. அதில், ஒரு மாதத்திற்கு ரூ.199, ரூ.249,ரூ. 349 ஆகிய பிளான்களில் சேவை கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
ஏர்டெல், அறிவித்துள்ள கட்டண விவரம் :

இந்த புதிய கட்டணத்தின் படி மாதம் தோறும் ரீசார்ஜ் ரூ. 35 என்ற அளவில் இருந்து, ரூ.49 என்ற விதிக்கப்பட்டுள்ளது.

28 நாட்கள் வேலிடிட்டி உடைய பேக்கேஜ் : பழைய கட்டணம் ரூ.249 , புதிய கட்டணம் ரூ. 298.
82 நாட்கள் வேலிடிட்டி உடைய பேக்கேஜ் : பழைய கட்டணம் ரூ. 448, புதிய கட்டணம் ரு.598.

வோடபோன் – ஐடியா அறிவித்துள்ள புதிய கட்டண விவரம் :
84 நாட்கள் வேலிடிட்டி உடைய பேக்கேஜ் : பழைய கட்டணம் ரூ.569 தற்போதய புதிய கட்டணம் ரூ.669 ஆகவும்,ஒரு வருடத்துக்கு அதாவது 365 நாட்களுக்கு ஆன பழைய கட்டஅம் ரூ.1699, புதிய கட்டணம் ரூ. 2399 ஆக உயர்ந்துள்ளது.மேலும், இந்தப் புதிய கட்டண உயர்வின் மூலம் ஏர்டெல் நிறுவனத்துக்கு வருவாயாக ரூ7 ஆயிரம் கோடியும், வோடபோன் நிறுவனத்துக்கு வருவாயாக ரூ.6 ஆயிரம் கோடியும் கிடைக்க வாய்ப்புண்டு என செய்திகள் வெளியாகிறது.

Related posts:

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் 'லவ் பைட்'!

டெஸ்ட்-- விமர்சனம்.!

’மக்கள் செல்வி’ வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’.!

பிஸ்கான்’25 – சிடிஎம்ஏ தொடக்க விழா தொழில்முனைவோருக்கு புதிய உந்துதல், புதுமை மற்றும் நவீன சிந்தனைகள் !

காடப்புறா கலைக்குழு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா!

விஜய் மில்டன் இயக்கும் இருமொழித் திரைப்படமான ப்ரொடக்‌ஷன் நம்பர் 5 படத்தில் இசை நாயகன் 'பால் டப்பா' நடிகராக அறிமுகமாகிறார்.!

"எனக்கு சினிமா மீது ஆர்வம் வர காரணம் நான் பிறந்து வளர்ந்த மதுரை மண் தான் -இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்பேச்சு!