வோடபோன் ஐடியா சேவைகளுக்கான கட்டணங்கள் டிசம்பர் முதல் உயர்வு ?

கடனில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் வோடபோன் ஐடியா நிறுவனம், நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், அதன் மொபைல் சேவைகளுக்கான கட்டணங்களை, டிசம்பர் முதல் தேதியிலிருந்து அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவங்களை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக, சேவைகளுக்கான கட்டணங்கள், டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் அதிகரிக்கப்பட உள்ளது.இவ்வாறு அதன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எந்தெந்த சேவைகளுக்கு, எவ்வளவு கட்டண உயர்வு என்பது குறித்த எந்த விபரங்களையும் வோடபோன் ஐடியா வெளியிடவில்லை. செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், வோடபோன் ஐடியா நிறுவனம், இதுவரை இந்திய சரித்திரத்தில் எந்த நிறுவனமும் கண்டிராத அளவுக்கு, 50 ஆயிரத்து, 921 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்துள்ளது. சரிசெய்த மொத்த வருமானம் குறித்த வழக்கில், கடந்த மாதம், உச்ச நீதிமன்றம், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக, வழக்கு தொடர்ந்த மத்திய அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது.இதன் காரணமாக, பாக்கி தொகையை கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு, நிதி அழுத்தத்தில் சிக்கியது, வோடபோன் ஐடியா.

Related posts:

மாநிலம் முழுவதும், பேனர்கள் அகற்றும் பணி ? உள்ளாட்சி நிர்வாகங்கள் மும்முரம் !

மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு ! பழனிசாமி அறிவிப்பு !!

சென்னை எல்.ஐ.சி யின் பங்குகளில் ஒரு பகுதி விற்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு !

தமிழக சிறைகளில் 30,000 முகக் கவசங்களை தயாரிக்கும் பணி !

ஊழல் குறித்து புகார் செய்யும் விதம் !

மாணவர்களுக்கு காலை உணவு தரும் அக்ஷயா பாத்ரா திட்டம் ! ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார் !!

கொரனாவில் அரசியல் வேண்டாம் ? எதிர்கட்சிகளுக்கு பத்திரிக்கையாளர் வாராகி அறிக்கை ?

வசதியற்ற 1,00,000 மூத்த குடிமக்களுக்கு ஆதரவுகரம் ! ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷனின் நிதி திரட்டல் நிகழ்ச்சி !