தமிழகத்தை சேர்ந்த இளம் கராத்தே வீரர்கள் இந்திய- இலங்கை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் 32 பதக்கங்களை வென்று சாதனை!

சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட வீரர்கள் கோவாவில் நடைபெற்ற போட்டியில் 15 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 32 பதக்கங்களை வென்றனர்.

கோவாவில் அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்திய-இலங்கை ஓப்பன் கராத்தே சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த இளம் கராத்தே வீரர்கள் சிறப்பாக விளையாடி, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மொத்தம் 32 பதக்கங்களை வென்றுள்ளனர்.

தமிழ்நாடு அணியினர் பல்வேறு வயது மற்றும் எடைப் பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு 15 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 8 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 32 பதக்கங்களை கைப்பற்றினர். போட்டியில் தனிநபர் கட்டா , தனிநபர் குமித்தே, குழு கட்டா மற்றும் குழு குமித்தே உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் பங்கேற்று தங்களது திறமை, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்தினர்.

இளம் வீரர்கள் மேற்கொண்ட தொடர் பயிற்சி மற்றும் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியே இந்த சாதனையின் அடித்தளம். மேலும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மொத்தம் 32 பதக்கங்களில் 15 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களையும் வென்ற தமிழக அணியினர் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி சென்னை திரும்பினர். மாநிலம் முழுவதும் இளம் வீரர்களிடையே கராத்தே விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை இந்த வெற்றி வெளிப்படுத்துகிறது.

இந்தச் சாதனையில் குறிப்பிடும்படியாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளான மேஹா மித்ரா மற்றும் மகிழ் மித்ரா ஆகியோர் தலா 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். இருவரும் இணைந்து 4 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றி தமிழக அணியின் வெற்றிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளனர். இளம் கராத்தே வீரர்களின் இந்தப் பதக்க வேட்டை, தமிழக விளையாட்டுத் துறைக்கு மேலும் உற்சாகமளிக்கும் வெற்றியாக அமைந்துள்ளது.

Related posts:

துபாயை சேர்ந்த மென்பொருள் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் முன்னணி திரைப்பட பாடகர்களுடன் இணைந்து சென்னையில் நடத்தும் புதுமையான இசை நிகழ்ச்சி RRR (ரீல் ரியல் ர...

டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டீபன்’ பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது.!

"சிக்மா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை"-நடிகை ஃபரியா அப்துல்லா!*

Amazon collaborates with IIT Roorkee to develop innovative packaging solutions from agricultural waste!

கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர் ஆர் ஜே சாய் ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் திரைப்படங்களை தயாரிக்கிறார்

ஐம்பதாவது படம் வரை வந்திருக்கிறேன் என்றால் என் இயக்குநர்கள், மீடியா என எல்லோரும் தந்த திட்டும் பாராட்டும்தான் காரணம்.!

விமல் நடிக்கும் புதிய படம் 'பரமசிவன் பாத்திமா', காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசுகிறது!

வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம் ? அதிர வைக்கும் மோசடி...?