ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ஸ்வகதாஞ்சலி…’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் + காமெடி + ஹாரர் ஜானரில்
‌தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி. கே. எம். தமிழ் குமாரன் தலைமை பொறுப்பு வகிக்க.. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் வேட்டையனாக தோன்றும் ராகவா லாரன்ஸின் கேரக்டர் லுக்கும், சந்திரமுகியாக நடிக்கும் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தின் கேரக்டர் லுக்கும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ ஸ்வகதாஞ்சலி …’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணியின் மயக்கும் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் சைதன்ய பிரசாத் எழுத, பின்னணி பாடகி ஸ்ரீநிதி திருமலா பாடியிருக்கிறார். இந்தப் பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலில் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத் ஆடும் நடனத்தை டான்ஸ் மாஸ்டர் கலா வடிவமைத்திருக்கிறார். இந்தப் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் இணையத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைக்கா- ராகவா லாரன்ஸ்- கங்கணா ரணாவத்- பி வாசு -எம். எம். கீரவாணி கூட்டணியில் தயாராகி, ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related posts:

ஜாக்கி --விமர்சனம்!

தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் !

இடையீட்டு கதிரியக்கவியல் வழிகாட்டுதலில் முடநீக்கியல் அறுவை சிகிச்சைக்கு மறுவிளக்கம் அளிக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர்

'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு!

திரைக்கதை எழுத்தாளர் & நடிகை சாந்தி பாலச்சந்திரனின் எழுத்து லோகா Chapter 1 – சந்திராவை வரலாற்றில் பதித்தது!

*தயாரிப்பாளர் அன்புசெழியன் வெளியிட்ட 'வருணன்- காட் ஆஃப் வாட்டர்'' திரைப்படத்தின் முன்னோட்டம்!

எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் முதல் பாடலான 'மக்காமிஷி' வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது!