‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான  டிக்கெட் புக்கிங்கில் புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர்!

இந்த ஆண்டில் உலக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான  டிக்கெட் புக்கிங்கில் புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர்!

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை சீரிஸின் மூன்றாவது பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பட வெளியீட்டிற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான (1.2 + மில்லியன் ) இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர்.

புக் மை ஷோவில் இந்த டிக்கெட் முன்பதிவு ஆர்வம் ‘அவதார்’ படத்தின் மீது இந்தியர்களின் எதிர்பார்ப்பை இன்னும் வலுவாக்கியுள்ளது. டிக்கெட் முன்பதிவுகளில் ‘அவதார்: ஃபயர் & ஆஷ்’ திரைப்படம் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘அவதார்: ஃபயர் & ஆஷ்’ திரைப்படத்தில் சாம் வொர்திங்டன் (ஜேக் சல்லி) மற்றும் ஜோ சல்டானா (நெய்திரி) உள்ளிட்ட கதாபாத்திரங்கள் மீண்டும் வருவதோடு புதிய கதாபாத்திரங்களும் அறிமுகமாகிறது. கதையின் புதிய நடிகர்களில் ஊனா சாப்ளின், ‘ஆஷ் பீப்பிள்’ குலத்தின் தலைவரான வராங்காக நடிக்கிறார்.

20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்த படத்தை டிசம்பர் 19 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியீடு செய்கிறது.

Related posts:

பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய அச்சு ஊடக, காட்சி ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.!

யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT - இந்தியன் 2 !

கிருஷ்ணராஜு தயாரிப்பில் புருனோ சாவியோ இயக்கும் 'மனிதம்' புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் !

Samsung TV Plus Announces the Launch of Four New FAST Channels From Viacom18 Exclusively on Samsung Smart TVs !

'ஜென்ம நட்சத்திரம்' வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!

துபாயை சேர்ந்த மென்பொருள் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் முன்னணி திரைப்பட பாடகர்களுடன் இணைந்து சென்னையில் நடத்தும் புதுமையான இசை நிகழ்ச்சி RRR (ரீல் ரியல் ர...

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பு ?