90 வயது தாத்தாவுக்கு சண்டை காட்சிகள் அமைப்பது மிகவும் சவாலாக உள்ளது ! பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்!!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் முதல் பாகத்தின் இறுதியில் தப்பித்து போன சேனாபதி மீண்டும் வந்து இந்தியாவில் நடக்கும் ஊழல்வாதிகளுக்கு மரண பயம் காட்டுவார் என தெரிகிறது. இந்த படத்தில் சண்டை இயக்குநராக பணிபுரியும் பீட்டர் ஹெயின், 90 வயது தாத்தாவுக்கு சண்டை காட்சிகள் அமைப்பது மிகவும் சவாலாக உள்ளது என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வெளியான இந்தியன் படத்தில் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் வயதான தாத்தா என இரு கெட்டப்களிலும், சந்துரு என மகனாகவும் நடித்து கமலஹாசன் அசத்தியிருந்தார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படம் இன்றளவும் ஷங்கரின் சிறந்த படமாக விளங்குகிறது. ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன் மற்றும் 2.0 என மூன்று பிரம்மாண்ட படங்களை ஷங்கர் கொடுத்தாலும், ஷங்கரின் ரசிகர்கள் இந்தியன் 2வையே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு இளம் வயது கதாபாத்திரம் இருக்கிறதா? இல்லையா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கமலின் பேரன் கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்கவுள்ளதாகவும், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ் என முன்னணி நடிகைகள் இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், 90வயது நிரம்பிய சேனாபதி ரோலில் மீண்டும் மிரட்ட வரும் கமல்ஹாசனுக்கு சண்டை காட்சிகள் அமைப்பது மிகவும் சவாலாக உள்ளது என இந்தியன் 2 படத்தின் ஸ்டன்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின் கூறியுள்ளார். இதில், என்ன சிக்கல் என்றால், மிகவும் பெர்ஃபெக்‌ஷன் பார்க்கும் கமல்ஹாசன், கையை தூக்குவது என்றால் கூட 90 வயது தாத்தா எப்படி கையை தூக்குவாரோ அப்படித்தான் தூக்குவார் என்றும், சண்டை காட்சிகளில் நம்பகத்தன்மை மிகவும் முக்கியம் என்பதால், மிக நுணுக்கமாக பார்த்து பார்த்து சேனாபதிக்கான சண்டை காட்சிகளை வைத்துள்ளதாக பீட்டர் ஹெயின் கூறியுள்ளார். கப்பல் ஏறி போயாச்சு பாடலில் விடுதலை பெற்று திரும்பும் சேனாபதியின் யங் கமல் போர்ஷன்களும் அங்கு அவர் சந்திக்கும் பிரச்னைகளும் கூட இந்தியன் 2வில் முக்கிய பங்காற்றும் என்றும், அந்த இடத்தில் சுகன்யாவிற்கு பதிலாக காஜல் அகர்வால் நடிப்பார் என்ற படம் குறித்த கதைகளும் இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts:

லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்' !
சேரன் நாயகனாக நடித்துள்ள 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு !
ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' பத்திரிகையாளர் சந்திப்பு !!
முத்ரா திட்டத்தில் 11,000 கோடி வாராக்கடன்? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ?
இயக்குனர் சச்சின் இயக்கத்தில்,ஐந்து மொழிகளில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ !
கார்கேவை பிரதமர் வேட்பாளராக்க காங்கிரஸ் முயற்சி!