அன்னபூரணியை மையப்பொருளாக கொண்ட சிறப்பு கொலு !அபிராமி ராமநாதன் இல்லத்தில் !!

மயிலாப்பூரில் உள்ள தங்கள் இல்லத்தில் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 இல் “அன்னபூரணியை மையப்பொருளாக கொண்ட சிறப்பு கொலுவை ” அமைத்து நவராத்ரி திருவிழாவை சிறப்பித்தார்
கலைமாமணி அபிராமி ராமநாதன் அவர்களின் துணைவியார் திருமதி. நல்லம்மை ராமநாதன்

“அருணகிரண மணிகொடிகள் ஒளிச்செய்ய
அமுத மதுரமலர் அரியணை மீதிநில்
அகிலம் முழுவதும் கொலு வீற்றிருந்து
அருள்தரும் அன்னபூரணி தாயே சரணம்”

கொலுவின் சிறப்பம்சங்கள் :
👉கோவிலின் கற்பகிரஹத்தில் உள்ள அன்னபூரணி அம்மனின் திருஉருவ சிலை போன்று மெய்யாய் தோன்றும் வெண்கல சிலைகள்.
👉கோவிலின் நுழைவாயிலை போன்ற தோற்றம் கொண்ட நுழைவாயிலும் அலங்காரமும் கண்கொள்ளா காட்சியாயிருந்தது.
👉 அம்மன் சிலைக்கு அணிவித்துள்ள அணிகலன்களும் அன்னப்பூரணி ஆலயத்தில் அம்மனுக்கு அணிவிக்க பட்டுள்ள அணிகலன்களை ஒத்துள்ளது இந்த கொலுவின் சிறப்பம்சம்.

கண்களுக்கு விருந்தும், மனதுக்கு பக்தி பரவசத்தையும் அளிக்கும் இந்த அருமையான அன்னபூரணி தாயாரை மையமாக கொண்ட இந்த கொலுவை கண்டுகளித்தவர்கள் ஆனந்த பரவசமடைந்து பெரிதும் பாராட்டினார்கள்.