திருநாகேஸ்வரத்தில் இராகு பகவானே அநுக்கிரஹ மூர்த்தியாய் உள்ளார்..!!!
திங்களூரில் சந்திரபகவான்..!!!
திருநள்ளாற்றில் சனீஸ்வரர்..!!!
சூரியனார் கோவிலில் சூரியன் என நவக்கிரக தலங்களில் உள்ள 8 தலங்களிலும் அந்தந்த கிரக தேவதைகள் உள்ளனர்…??
ஆனால் கஞ்சனூரில் மட்டும் சிவபெருமானே சுக்ரனாக காட்சி தருகிறார் என்று என்னைக்காவது நாம் யோசித்துப் பார்த்ததுண்டா..!!!
அதற்கான பதில் கஞ்சனூர் ஸ்தல மஹாத்மியத்திலிருந்து கிடைக்கிறது. அதனால் தான் இந்த பதிவு.
திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் அருந்த எண்ணிய தேவர்களுக்கு மேருமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள்…!!
இறுக்கம் தாங்காமல் வாசுகியானது விஷத்தை உமிழ்ந்தது பாம்பின் கொடிய விஷத்தின் உஷ்ணத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பாம்பின் தலைப்பகுதியில் அசுரர்களும் வால்பாகத்தில் தாங்களும் பிடித்துக்கொண்டு கடையத் துவங்கினார்கள் நீண்ட முயற்ச்சிக்கு பின் அமுதம் வெளியே வந்தது…!!!
மனம் மகிழ்ந்த தேவர்கள் திருமாலின் மோஹினி உருவத்தால் அசுரர்களை ஏமாற்றி அமுதத்தைத் தாங்களே உண்டனர்…!!!
இதனால் கோபமுற்ற அசுர குரு சுக்ராச்சார்யார் தேவர்களை நோக்கி வேதங்களையும் தர்மசாஸ்திரங்களையும் உணர்ந்த நீங்கள் உழைப்பில் பங்கு கொண்ட அசுரர்களுக்கு அதன் பலனில் பங்களிக்காமல் துரோகம் செய்துவிட்டீர்கள்…!!!
அமுதம் உண்டதால் இறவாத்தனயன்மை பெற்ற நீங்கள் மனைவி மக்கள் நாடு நகரம் அனைத்தும் இழந்து தேவலோகத்தை விட்டு பூலோகம் சென்று அல்லல்படுவீர்கள் என்று சாபமீட்டார்..!!!
சுக்ரபகவானின் சாபத்தால் துயரமுற்ற தேவர்கள் வியாச முனிவரிடம் சென்று சுக்ர சாபத்திலிருந்து விடுபட விண்ணப்பம் செய்தனர்…!!!
வியாச முனிவரோ தேவர்களை சுக்ராச்சார்யர் இருக்குமிடத்திற்கு தம்முடன் அழைத்து சென்றார்…!!!
தேவர்களின் பிழையைப் பொறுத்து சாப விமோச்சனம் அளிக்குமாறு சுக்ரபகவானிடம் வேண்டினார்…!!!
அதற்கு சுக்ராச்சார்யர் இதற்கு ஒரு பரிஹாரம் இருப்பதாகவும் காவிரி நதியின் வடகரையில் தங்கள் தந்தையார் பராசரமுனிவரால் பூஜிக்கப்பட்ட பலாசவனம் என்னும் கம்ஸபுர க்ஷேத்திரத்தையடைந்து அங்கு எழுந்தருளியிருக்கும் கற்பகாம்பிகா ஸமேத ஸ்ரீ அக்னீஸ்வர ஸ்வாமியை வழிபாடு செய்து வர சுக்ர சாபத்திலிருந்து விமோச்சனம் பெறலாம் என்று கூறினார்…!!!
தேவர்களும் அவ்வாறே கம்ஸபுரத்தை அடைந்து சிவத்தை நோக்கி தவத்தைச் செய்து இடையறாது வழிபட்டு வந்ததால்
பரம கருணாமூர்த்தியான சர்வேஸ்வரன் தம்பதி சமேதராக சுக்கிரனின் இராசிகளான ரிஷப இராசியில் சூரியனும் துலா இராசியில் சந்திரனும் இருக்கும் வைகாசி விசாகப் பெருநாளில் காட்சி தந்து சாப விமோச்சனம் அளித்தார்…!!!
ஆகையால் தான் கஞ்சனூரில் மட்டும் சுக்ரபகவான் இருக்க வேண்டிய இடத்தில் உமாமஹேஸ்வரராய் எம்பெருமான் அக்னீஸ்வரரே எழுந்தருளியிருக்கிறார் என்கிறது ஸ்தல வரலாறு… எனவே சுக்ரனின் அருளைப் பெற கஞ்சனூர் வந்து தரிசனம் செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.