ராசி பலன்கள்!

மேஷ ராசி நேயர்களே…!

மறதியால் சில பிரச்சினைகள் அவ்வப்போது வந்து நீங்கும். குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டாலும் அதற்காக கவலைப்பட வேண்டாம். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தராதீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே…!

நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். முதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும்.

மிதுன ராசி நேயர்களே…!

தெளிவான முடிவை எடுப்பீர்கள். குடும்பத்தினரிடம் நன்கு பழகி சந்தோஷமாக இருப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி நேயர்களே…!

திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் உங்களைத் தேடிவரும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே…!

பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிக்கு உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆசைகளை நிறைவேற்ற ஆயத்தமாவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே…!

வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை தேவை. புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபடுவீர்கள். திடீரென வெளியூர் பயணங்கள் ஏற்படலாம்.

துலாம் ராசி நேயர்களே..!

முகப்பொலிவுடன் காணப்படுவீர்கள்.பாதியில் நின்று போன சில காரியங்களை இன்று முடிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே..!

உறவினர்கள் நண்பர்களை அனாவசியமாக பகைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி போட்டாலும் அதற்காக கவலை கொள்ள வேண்டாம்.

தனுசு ராசி நேயர்களே…!

உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசித்து பார்ப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வதில் அக்கறை காண்பீர்கள்.

மகர ராசி நேயர்களே…!

மனக்குழப்பங்கள் நீங்கி சில தெளிவான முடிவை எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள்.

கும்ப ராசி நேயர்களே…!

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும்.

மீனராசி நேயர்களே…!

எளிதாக நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முயற்சி மேற்கொள்வீர்கள். வீட்டை விரிவுபடுத்த சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.