பார்வையாளர்களை இறுதிவரை யூகிக்க வைக்கும் கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் ‘மாறுவேஷம்’.

வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், படம் தற்போது திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்று, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லராக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தை விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் இணைந்து ஓநைரோமன்சி பிக்சர்ஸ் சார்பில், மன்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் வைபவ், திலக் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மர்மமான கொலை வழக்கு ஒன்றின் உண்மையை அவர் கண்டறிய முயலும்போது, அதில் மறைக்கப்பட்ட அடையாளங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் ஆகியவற்றை இப்படம் பேசுகிறது. சஸ்பென்ஸ், உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் விசாரணை, திரில்லர் ஆகியவற்றை கொண்ட விறுவிறுப்பான கதையாக நகரும். மிஸ்ட்ரி ஜானர் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ‘மாறுவேஷம்’ மறக்க முடியாத திரை அனுபவத்தை வழங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக வியானா நடித்துள்ளார். மேலும் ராம்கி, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியான், ஜார்ஜ் விஜய், இந்துமதி, மு. ராமசாமி மற்றும் செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது யூ/ஏ சான்றிதழும் கிடைத்துள்ளது. இதையடுத்து ‘மாறுவேஷம்’ திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது

Related posts:

ஜியோ மீது மோசடி புகாரளித்த ஏர்டெல்!

நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படம் 'கைக்குட்டை ராணி' ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்றது!

கடன் வாங்கப் போறீங்களா... இந்த 6 விஷயங்களை மறந்துடாதீங்க!

கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம்!

யார் ஹீரோ.. யார் ஜீரோ..” விஜயகாந்த்.. ரஜினிகாந்த்.. ஓர் ஒப்பீடு..!

சரத்குமார் - சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் 'கொம்பு சீவி' படத்தின் இசை வெளியீட்டு விழா!

திமுக அரசின் முதல் பட்ஜெட்.. இடம் பெற வாய்ப்புள்ள 5 சூப்பர் விஷயங்கள்

வித்தியாசமான பரிமாணத்தில் உருவாகியுள்ள 'தேடு' !