லெஜண்ட் சரவணன் நடிப்பில் முதல் படம் சறுக்கினாலும் இரண்டாவது படம் எப்படியாது ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என துரை செந்தில்குமார் இயக்கம், ஜிப்ரான் இசை என வலுவான டீமுடன் தன் இரண்டாம் படத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார், இந்த கூட்டணி அவருக்கு வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம்.கதாநாயகனான சக்திவேல், தூத்துக்குடியில் தனது மகளுடன் ஒரு வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு மெக்கானிக் ஆவார். சக்திவேலின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார், மேலும் அவரது மகளுக்குக் காது கேட்கும் குறைபாடு உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் நடக்கும் சில சட்டவிரோதச் செயல்களால், சக்திவேலின் மகள் சில சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும்போது, சக்திவேலின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளையே நாம் இங்கு காண்கிறோம்.
தென் தமிழகத்தில் ஒரு ஹார்பர்-ல் சட்டத்திற்கு புறம்பாக ஒரு கண்டெய்னர் வருகிறது. அந்த ஊரில் லெஜண்ட் சரவணன் தன் மகளோட ஒரு மெக்கானிக் கடையில் மெக்கானிக் ஆக வாழ்க்கையை நடத்தி வருகிறார், அம்மா இல்லாமல் தன் மகளை உயிராக நினைத்து வாழ்கிறார்.
அதே நேரத்தில் இன்ஸ்பெகர் ஆண்ட்ரியா அந்த கண்டெய்னரில் ஏதோ உள்ளது. கண்டிப்பாக அதை வெளியே கொண்டு வர வேண்டும் என போராட, ஒரு கட்டத்தில் சரவணனுக்கு அந்த ஹார்பரில் சால்ட் என்ற தாதா கார்-யை சர்விஸ் விட்டு அடிக்கடி அங்கு செல்லும் நிலை உருவாகிறது.
சரி இது தான் வாய்ப்பு ர்ன ஆண்ட்ரியா , சரவணன் மகளை மறைத்து வைத்து விட்டு, சால்ட் தான் உன் மகளை கடத்தினான் என்பது போல் திசை திருப்பி அவர் கையாலேயே அந்த கண்டெய்னரை வெளியே கொண்டு வருகிறார்.
ஆனால், அதன் பின்பு தான் தெரிகிறது, இந்த அத்தனை ஸ்கெட்ச் போட்டது ஆண்ட்ரியா இல்லை, சரவணன் தான், எதற்காக இப்படி செய்தார், ஏன் செய்தார் என்பதன் மர்மமே மீதிக்கதை.
லெஜண்ட் சரவணன் முதல் படத்தை விட அத்தனை முன்னேற்றம், மகளுடன் பாசம், மகளுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் போரட்டம், ஆக்ஷன் என ஒரு மாஸ் ஹீரோவாக ஜெயித்துவிட்டார், கண்டிப்பாக அடுத்தடுத்து இவர் படங்கள் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு உருவாகும் படி ஒரு படத்தை கொடுத்துவிட்டார்.
இந்த அத்தனை கிரிடிட்ஸும் இயக்குனர் துரை செந்தில்குமாருக்கு தான், சரவணன் அவர்களுக்கு என்ன வருமோ அதை சரியாக பயன்படுத்தி சூப்பராக கொடுத்துள்ளார். ஆண்ட்ரியா, ஷாம் என அனைவருமே நல்ல நடிப்பை தர, வில்லனாக வரும் சந்தோஷ் கதாபாத்திரம் அவரை சார்ந்து வரும் டுவிஸ்ட் எல்லாமே தியேட்டர் மொமண்ட் ஆக ஒர்க் ஆகியுள்ளது.என்ன கதைக்களம் தான் நாம் பல மாஸ் படங்களில் பார்த்தது, ஆனால், அதில் திரைக்கதையை வேகவேகமாக அமைத்தது படத்திற்கு பலமாக உள்ளது, படம் ஆரம்பித்து கதைக்குள் செல்லுவரை கொஞ்சம் பொறுமையாக சென்றாலும் சரவணன் vs சால்ட் என்று மாறும் போது கதை சூடு பிடிக்க, இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் ட்ரெயின் சண்டை காட்சி பீக் ஆகிறது.டெக்னிக்கலாக படம் ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே சூப்பர், அதிலும் ஜிப்ரானின் பின்னணி இசை மிரட்டல்.முதல் படத்தை விட நடிகராக பக்கவாக மாறிவிட்டார் லெஜண்ட் சரவணா என்று தான் சொல்ல வேண்டும். ஜெயிலர், விக்ரம், லியோ போன்ற படங்களுக்கு கொஞ்சமும் குறையாத அளவுக்கான ஒரு திரைக்கதையை லெஜண்ட் சரவணாவை வைத்து இயக்கி படத்தை தியேட்டருக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி பார்க்கச் சென்றவர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து காத்திருக்கிறது.
