லோகா– அத்தியாயம்-1 சந்திரா — விமர்சனம்..!

பெங்களூருவில் கேரளத்தைச் சேர்ந்த சன்னி, நைஜில், வேணு என்ற மூன்று இளைஞர்கள் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். சன்னி (நஸ்லென்) காதல் தோல்வியைச் சந்தித்து அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய எதிர் வீட்டிற்குப் புதுவரவாக வருகிறார் சந்திரா (கல்யாணி ப்ரியதர்ஷன்). சந்திராவால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பின் தொடரவும் செய்கிறார் சன்னி. அதே நேரத்தில் சந்திராவிடம் சில அமானுஷ்ய விஷயங்கள் தெரிவதையும் கவனிக்கிறார். அந்த சமயத்தில், மனிதர்களை கடத்தி அவர்களது உடல் உறுப்புகளை திருடும் கும்பலால் பெங்களூரில் பரபரப்பு ஏற்படுகிறது. அந்த கும்பலுடன் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரான சாண்டியுடன், கல்யாணி பிரியர்தர்ஷன் மோத வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், கல்யாணி பிரியர்தர்ஷன் அதீத சக்திகள் கொண்ட பெண் மட்டும் அல்ல, அதற்கும் மேல…என்கிற உண்மை தெரிய வருகிறது. அவர் யார் ? அவரைப் பற்றிய உண்மை தெரிந்த பிறகு என்ன நடந்தது ? என்பதை நம் புராணக் கதைகள் கதாபாத்திரத்தை சூப்பர் ஹீரோவாக சித்தரிக்கும் வகையில் சொல்வதே ’லோகா – அத்தியாயம் 1 : சந்திரா’.

சூப்பர் பவர் கொண்ட சந்திராவாக கல்யாணி ப்ரியதர்ஷன் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளிலும், தனது அடையாளத்தை மறைக்கச் சாந்தமாக அனைத்தையும் கையாளும் இடத்திலும் சூப்பர் ஹீரோயினாக மிரட்டுகிறார். முக்கியமாக, ஆக்ஷன் காட்சிகளில் பெரும் சிரத்தை எடுத்து உழைத்திருக்கும் அவருக்கு ஸ்பெஷல் விசில் போடலாம்.

பயந்த சுபாவம் கொண்டவராக, தனது டிரேட்மார்க் அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு கன கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் நஸ்லென். ஆங்காங்கே அவர் நிகழ்த்தும் காமெடிகளும் படத்தின் கலகலப்பிற்கு உதவியிருக்கின்றன. சீரியஸ் காட்சிகளிலும் அவருடைய உடல் மொழி, திரையரங்கில் சிரிப்பொலிகளால் நிரப்புகிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கவுடா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடன இயக்குநர் சாண்டியின் வில்லத்தனம் மிரள வைக்கிறது.சிறப்பு தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் மற்றும் திரையில் தோன்றாத பெரியவர் கதாபாத்திரங்கள் எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் திரைக்கதையில் கையாளப்பட்டுள்ளது.படத்தின் துவக்கத்தில் என்ன நடக்கிறது, என்பது சற்று புரியாதபடி இருந்தாலும், சந்திரா யார் ? என்பதை மிக தெளிவாக சொல்லி, சூப்பர் மேன் உலகம், அதில் இருக்கும் அதீத சக்தி படைத்தவர்கள், என்று படத்தில் ஏகப்பட்ட விசயங்கள் இருந்தாலும், அனைத்தையும் சுருக்கமாக சொல்லி படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சாமன் சாக்கோ.
நம் புராணக் கதைகளில் உள்ள கதாபாத்திரத்தை அதீத சக்தி படைத்த சூப்பர் மேனாக சித்தரித்து, அதன் மூலம் ஒரு மிகப்பெரிய சூப்பர் மேன் உலகத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் டொமினிக் அருண், சந்திரா என்ற முதல் அத்தியாயத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளார். குறிப்பாக சந்திராவின் சிறுவயது பாதிப்பு, அங்கிருந்து அவர் அதீத சக்தி படைத்த பெண்ணாக உருவெடுப்பது, அவரது அடுத்தடுத்த பயணங்கள் ஆகியவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைக்கும் விதத்தில் இருக்கிறது.

லோகா–அத்தியாயம்–1 சந்திரா படம் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் இருக்கிறது.

Lokah Chapter 1 Review

Related posts:

இந்தியாவில் களமிறங்கும் சீன பேட்டரி ஸ்கூட்டர் !

”காதல், துரோகம் மற்றும் சமூக போராட்டங்கள் என உணர்வுப்பூர்வமான கதையை ‘மையல்’ பேசுகிறது” இயக்குநர்  APG  ஏழுமலை!

டிஸ்னி பிக்சார் புதிய விஷுவல் ஸ்பெக்டக்கிள் “எலியோ” – தமிழ் ட்ரெய்லர் வெளியீடு! ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளது!

மைய்யல்-- விமர்சனம்!

குடும்பஸ்தன் -- விமர்சனம்..!

'ஜெய் ஹனுமான்' சீக்வலின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ப்ரீ லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது!

பூரி கனெக்ட்ஸின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தில் இருந்து இப்போது ’பிக் புல்’ பாடல் வெளியாகியுள்ளது!

டீன்ஸ் நன்றி அறிவிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பார்த்திபன் அன்பு முத்தமழை !