பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யமாஹா வழங்கும் அற்புதமான சலுகைகள்.150cc FZ மாடல் வரம்பு மற்றும் 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர்களில் இப்புதிய சலுகைகளும் நிதி திட்டங்களும் பொருந்தும்தமிழகத்தில் அறுவடைத் திருநாளான பொங்கலைக் கொண்டாடும் வகையில், யமாஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. 31 ஜனவரி 2024 வரை செல்லுபடியாகும் இந்தப் பிரத்யேக சலுகைகள் Yamahaவின் 150cc FZ மாடல் வரம்பு, FZ16 மற்றும் 125cc Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர்களுக்குப் பொருந்தும்.

வழங்கப்படும் சலுகைத் திட்டங்கள் கீழ்க்காணுமாறு:

150cc FZ-S Fi V4, FZ-S Fi V3 மற்றும் FZ Fi ஆகியவற்றில் ரூ. 6,000/- வரையிலான பலன்கள் அல்லது ரூ. 1,999/- டவுன் பேமெண்ட் சலுகை
FZ-X இல் ரூ.7,000/- வரையிலான பலன்கள் அல்லது ஜீரோ டவுன் பேமெண்ட் சலுகை
125 Fi ஹைபிரிட் ஸ்கூட்டர்கள் – RayZR மற்றும் Fascino ஆகியவற்றில் ரூ.4,000/- வரையிலான பலன்கள் அல்லது ஜீரோ டவுன் பேமெண்ட் சலுகை

யமாஹாவின் தற்போதைய தயாரிப்பு வழங்குபட்டியலில் YZF-R3 (321cc), MT-03 (321cc), YZF-R15 V4 (155cc), YZF-R15S V3 (155cc), MT-15 V2 (155cc); FZS-Fi பதிப்பு 4.0 (149cc), FZS-Fi பதிப்பு 3.0 (149cc), FZ-Fi (149cc), FZ-X (149cc) மற்றும் Aerox 155 (155cc), Fascino 125 Fi Hybrid (125cc), Ray ZR 125 Fi Hybrid (125cc) மற்றும் Ray ZR Street Rally 125 FI Hybrid (125cc) போன்ற ஸ்கூட்டர்கள் அடங்கும்.