‘மார்கழி திங்கள்’ -விமர்சனம்.!

“என் இனிய தமிழ் மக்களே நான் உங்கள் பாரதி ராஜா என்னை இயக்குனராக ஏற்றுக்கொண்டது போலவே என் மகன் மனோஜை இயக்குனராக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று பாரதிராஜா அவர்களின் வேண்டுகோளோடு தொடங்குகிறது மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்துள்ள மார்கழி திங்கள் திரைப்படம்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு ஊரில் உள்ள பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் கவிதாவும், வினோத்தும். முதல் மதிப்பெண் எடுப்பதில் இருவருக்கும் கடுமையான போட்டி ஏற்படுகிறது. அந்த போட்டியே ஒரு கட்டத்தில் ஷ்யாம் செல்வன் மனதில் காதல் மலர செய்கிறது. ஆனால் ரக்ஷ்னா மனதில் காதல் இல்லை.அந்தப் பள்ளியின் தாளாளர் மாவட்டத்தில முதல் மதிப்பெண் எடுப்பவருக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்கிறார். இருவரும் நன்றாக படிக்கிறார்கள்.ரக்ஷ்சனா முதல் மதிப்பெண் எடுப்பதற்காக கணிதத்தில் பத்து மார்க் கேள்வியை எழுதாமல் விடுகிறான் ஷ்யாம் செல்வன்.ரக்ஷ்சனா முதல் மதிப்பெண் எடுத்து பரிசையும் வெல்கிறாள்.ரக்ஷ்சனா தோழி ஹேமா வினோத் பத்து மார்க் விடையை உனக்காக எழுதாமல் விட்டதால்தான் நீ பர்ஸ்ட் மார்க் எடுத்ததாக சொல்கிறாள். கவிதாவுக்கு வினோத் மேல காதல் வருது இந்நிலையில் படிப்பு முடிந்தவுடன் தனது காதல் பற்றி தாத்தா பாரதிராஜாவிடம் ரக்‌ஷனா சொல்கிறார். பேத்தியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாலும், கல்லூரி படிப்பு முடிந்த பிறகு தான் மற்ற விசயங்கள், அதுவரை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல், பேசிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நிபந்தனை போடுகிறார். அதன்படி, இருவரும் வெவ்வேறு கல்லூரியில் படிக்க செல்கிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஷ்யாம் செல்வன் நடிக்க கத்துக்கணும். நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ரக்‌ஷனா பரவாயில்லை. கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். பள்ளி மாணவர்களை பற்றிய படத்தில் நகைச்சுவைக்கு நிறைய வாய்ப்பிருந்தும் நகைச்சுவை சிறிதும் இல்லை. நாயகன் ஷ்யாம் செல்வன், எளிமையாகவும், எதார்த்தமாகவும் நடித்திருக்கிறார்.நாயகி ரக்‌ஷனா, காதல் காட்சிகளிலும், தனது காதலை தாத்தாவிடம் சொல்லும் காட்சிகளிலும் அழகாக நடித்திருக்கிறார். காதலுக்காக தாத்தா போடும் நிபந்தனையை ஏற்று நடப்பவர், தனது காதலுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு எதிராக செயல்படும் காட்சிகள் மிரட்டல்.

நாயகியின் தாத்தாவாக நடித்திருக்கும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு மட்டும் அல்ல அவரது நடிப்புக்கும் வயதாகிவிட்டது தெளிவாகத் தெரிகிறது. அதிலும் சில இடங்களில் முடியாதவரை வம்பு பண்ணி நடிக்க வைத்தது போல் இருக்கிறது. இருந்தாலும், பல இடங்களில் தனது நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

நாயகியின் தாய்மாமனாக நடித்திருக்கும் இயக்குநர் சுசீந்திரன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்.இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காதல் கதைக்கு ஏற்றபடி இருந்தாலும் மனதில் நிற்கவில்லை..

வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவில் கதைக்களம் அழகாகவும், கதாபாத்திரங்களின் உணர்வுகள் அழுத்தமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது.சுசீந்திரனின் எளிமையான காதல் கதையை வலிமையாக சொல்வதற்காக ஆணவப் படுகொலையை திரைக்கதையில் சேர்த்திருக்கும் இயக்குநர் மனோஜ் கே.பாரதிராஜா, அதை புதிய வழியில் சொல்லி ரசிகர்களின் புருவத்தை உயர்த்த செய்திருக்கிறார்.பள்ளி பருவத்தில் வரும் காதலை வைத்துக்கொண்டு, வழக்கமான பாணியில் திரைக்கதை மற்றும் காட்சிகளை நகர்த்தி செல்வது படத்திற்கு சற்று பலவீனமாக இருந்தாலும், படத்தில் வரும் திடீர் திருப்பமும், அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்களும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது.
நடிகர்களிடம் வேலை வாங்கிய விதம், காதல் காட்சிகளை கையாண்ட விதம், நாயகியின் தாத்தாவின் மனதுக்குள் ஒளிந்திருக்கும் சாதி வெறி, அதை வெளிப்படுத்தும் அந்த ஒரு வார்த்தை, போன்ற விசயங்களை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும் மனோஜ் கே.பாரதிராஜா, இயக்குநராக இன்னமும் மெனக்கெட வேண்டும்.

இந்த ‘மார்கழி திங்கள்’ காதலர்களுக்கான படமா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும்.