எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் இயங்கும் விழி ஒளி பரிசோதகர் பயிற்சி பள்ளியின் 60ஆம் ஆண்டு விழா மற்றும் உலக விழி ஒளி ஆய்வாளர் தினம் சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மருத்துவ கல்வி இயக்குனர் மரு.R.சாந்தி மலர் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசும்போது:- இந்த பயிற்சிப் பள்ளி 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது.எழும்பூர் கண்மருத்துவமனை இயக்குநராக இருந்த RGS முத்தையா அவர்கள்பிரைமரி ஹெல்த் கேர் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த பயிற்சிப் பள்ளியைத் துவக்கினார். என்றும் ஆரம்பத்தில் டிப்ளமா இன் ஆத்தால்மாலஜியாகத் தொடங்கி பின்னர் பிஎஸ்சி ஆப்தாலமாலாஜியாக விரிவு செய்ய படுத்தப்பட்டது.தற்போது எம்எஸ்சி ஆப்தாலமாலஜியாக ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார் . ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை கல்லூரி டீன் மரு.E.தேரணிராஜன், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் மரு.M.R.சித்ரா மற்றும் விழி ஒளி பரிசோதக பயிற்சி பள்ளி மருத்துவ அதிகாரி மரு.M. ஹேமா நந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வினை விழி ஒளி பரிசோதகர் பயிற்சி பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் 500 க்கும் மேற்பட்ட விழி ஒளி பரிசோதகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.விழி ஒளி பரிசோதகர் பயிற்சி பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு தினேஷ்.கே.ஷா மற்றும் செயலாளர் திரு.E. சந்திரசேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பிரதான் மந்திரி யோஜானா திட்டத்தில் 14 கோடி மக்களுக்கு வங்கி கடன் ?
ரீமேக் ஆகும் அஜித்தின் உல்லாசம் ! 22 ஆண்டுகளுக்கு பின்..!!
சச்சின் டெண்டுல்கர், '800' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்!
தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியானது, ஜெயம் ரவியின் “சைரன்” பட டீசர் !!!
விஜய் தேவரகொண்டா, பரசுராம், தில் ராஜுவின் 'VD13/SVC54' படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் டீசருடன் அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகிறது!
’தி அக்காலி’ -- விமர்சனம் !
செலிபிரிட்டி வாலிபால் லீக் போட்டி
நடிகர் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் இருந்து திறமையான நடிகர் நிகிலின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது!