அரசு வேலை வாங்கித்தர்றேன்னு சொல்லி ரூ70 லட்சம் மோசடி; அதிமுக மாஜி அமைச்சர் சரோஜா தலைமறைவு?

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ70 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வர்றாங்க. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த அதிமுகவை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் சரோஜா. இவர், அமைச்சராக இருந்த போது சத்துணவு திட்டத்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று கொண்டு மோசடி செஞ்சிட்டதா அவரது உறவினர் குணசீலன் பரபரப்பு புகார் அளிச்சிருந்தாரு.

இதன்பேரில் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் மேல மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செஞ்சிருக்காங்க. இந்த புகாரின் பேரில் ரூ70 லட்சம் வரை பலரிடம் சரோஜா பணம் வாங்கி கொண்டு மோசடி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தவுடன், சரோஜா மற்றும் அவரது கணவரும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செஞ்சாங்க. இந்த மனு 2 முறை விசாரணைக்கு வந்தப்போ சரோஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு மீதான விசாரணைக்கு வாய்தா கேட்டாரு

இதனால் 2 முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வரும் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில் சரோஜா அவரது கணவர் லோகரஞ்சன் இருவரும் தலைமறைவாகி விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அவருடைய உறவினர் குணசீலன் என்ன சொல்றாருன்னா : கடந்த அதிமுக ஆட்சியில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சராக இருந்த சரோஜா சத்துணவு துறையில் வேலை வாங்கித்தருவதாக சொன்னாரு. இதனால் நானும் எனது மனைவியும் சுமார் ரூ1 கோடி வரை அவருக்கு பணம் பெற்று கொடுத்தோம்.

ஆனால் அவர் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. இதுபற்றி ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அங்கு வழக்கு பதிவு செய்யாத நிலையில், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செஞ்சேன். இந்த புகாரையடுத்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு அழைச்சப்போ முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது தரப்பிலிருந்து யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாக இருக்கிறாங்கங்கிறார்.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் என்ன சொல்றாங்கன்னா, ‘‘சரோஜா மற்றும் அவரது கணவர் மீதும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் வீட்டுக்கு விசாரணைக்கு சென்றபோது, வீட்டில் முன்னாள் அமைச்சர் இல்லை. இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. முன்ஜாமீன் மனு மீது நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பிற்கு பிறகு போலீசாரின் நடவடிக்கை தொடரும்ன்னு சொல்றாங்க. கைது நடவடிக்கைக்கு பயந்தே முன்னாள் அமைச்சர் சரோஜா குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.வருமான வரித்துறையினர் சோதனை நடந்த அமைச்சர்களுக்கெல்லாம் அறிக்கை விட்ட ஓபிஎஸ்ஸூம் இபிஎஸ்ஸூம் எனக்கு அறிக்கை விடலையேன்னு வருத்தப்பட்டாங்களாம். இதே மாதிரியான பணமோசடி வழக்குல சிக்குன முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபிலை கட்சிய விட்டே நீக்கிட்டாங்க. உங்கள கட்சிய விட்டு நீக்காம வச்சிருக்காங்களே அதுவே பெரிய விஷயம்னு சந்தோஷப்படுங்கம்மான்னு உடன்பிறப்புகள் ஆறுதல் சொல்றாங்களாம்.