பச்சைக்கொடி காட்டிய விஜய்.. பக்காவா பிளான் போட்ட விஜய் மக்கள் இயக்கம். பதறும் திமுக, அதிமுக.

நகராட்சித் தேர்தல்ல விஜய் மக்கள் இயக்கம். போட்டி ? பதறும் திமுக, அதிமுக..
இப்போதிலிருந்தே விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் களம் இறங்கி விட்டதால் வருகின்ற நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அதிக அளவில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக தெரியுது.

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிமன்ற தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்வரும் நகராட்சிமன்றத் தேர்தலையும் குறிவைத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாகமாக களமிறங்கியுள்ளனர். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் முகாமில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிரமா வேலை செய்ய அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் 169 பேர் போட்டியிட்டாங்க., அதில் 129 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் 2 ஊராட்சி மன்ற தலைவர்கள், 12 துணைத் தலைவர்கள், 115 வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்காங்க.. இது விஜய் மக்கள் இயக்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியா கொண்டாடுறாங்க.

வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் நடிகர் விஜய்யை சந்திப்பதற்காக பனையூரில் உள்ள விஜய் இல்லத்திற்கு வருகை தந்து அவரை சந்திச்சாங்க, அவங்க அத்தனை பேரையும் சந்தித்த விஜய் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களோட போட்டோ எடுத்துக்கிட்டாரு. அதற்கடுத்து செய்தியாளரிடம் பேசிய விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் பூஸ்ஸி ஆனந்த், வெற்றி பெற்ற மக்கள் மன்றத்தினர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகளிடம் கேட்டு நிறைவேற்றி தரணும்னு சொன்னாரு, இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எவர் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்னுஅவர் எச்சரித்தாரு. விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் தமிழக மக்களின் அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்க பாடுபடணும்னு தனது அறிக்கையில் சொல்லியிருக்காரு.

இந்த வெற்றி எதிர்பாராத வெற்றிங்கிறதால இது விஜய்யையும், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளையும் அவரது ரசிகர்களையும் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் நகராட்சி மன்ற தேர்தலிலும் இதே பாணியில் அதிக இடங்களில் வெற்றி பெறணும்ங்கிற முனைப்போட விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்கியிருக்கிறாங்க. இந்நிலையில் எதிர்வரும் நகராட்சி மன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு நீக்கம் மற்றும் திருத்தம் நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும்னு கரூர்ல விஜய் மக்கள் இயக்கம் சார்பா போஸ்டர் அடித்து நகரப் பகுதிகள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது, தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றியை தொடர்ந்து விஜய் மிக உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதால், அடுத்த தேர்தலில் மன்ற நிர்வாகிகளை களமிறங்க அவர் பச்சைக்கொடி காட்டி இருப்பதால், அவரது ரசிகர்கள் இப்போதிலிருந்தே நகர மன்ற தேர்தலில் கணிசமான வெற்றி பெறணும்ங்கிற நோக்கில் ஈடுபாடு காட்டி வர்றாங்க.,

இந்நிலையில் நகராட்சி மற்றும் மாநகராட்சி மன்ற தேர்தல்களில் தேர்தல் பணியாற்ற விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் இப்போ களமிறங்கியிருக்காங்க.. அதற்கு சான்றாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் வாக்காளர் பெயர் சேர்ப்பு நீக்கம் மற்றும் திருத்த முகாமிலும் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிர பணி ஆற்ற தயாராக இருக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளாக அரசியல் களத்தில் உள்ள திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இப்போதிலிருந்தே விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் களம் இறங்கி விட்டதால் வருகின்ற நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அதிக அளவில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக தெரியுது. கிராம ஊராட்சி மன்றத் தேர்தலை போல நகர்ப்புற மற்றும் மாநகராட்சி மன்ற தேர்தலிலும் அதே பார்முலாவில் வீடுதோறும் சென்று பொதுமக்களை சந்தித்து விஜய் மக்கள் மன்றத்தின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பரப்புரை மேற்கொண்டு வெற்றி வாகை சூட இருப்பதாக கரூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் வருகின்ற நகராட்சி மன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களம் காண இருப்பது உறுதியாகி விட்டது, ஊராட்சி மன்ற தேர்தலில் பெற்ற எதிர்பாராத அந்த மாபெரும் வெற்றியை நகராட்சி மன்றத் தேர்தலில் விஜய் மக்கள் மன்றம் பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எப்போது அரசியலுக்கு வருவார் என ரஜினிகாந்தை எதிர்பார்த்து எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் ஓய்ந்து போய்விட்ட நிலையில், அரசியலுக்கு வருவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்துள்ள நடிகர் விஜய் சொன்னபடியே மெல்ல மெல்ல அரசியல் களத்தில் நீச்சம் போடுவது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.ஆனா திமுக அதிமுகவுக்கு இது அதிர்ச்சியாகத் தான் இருக்குது.