தமிழக அரசியலில் அனாதையாகும் அதிமுக? பாமகவைப் போல கூட்டணியை முறிக்கும் பாஜக..?
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததுமே கூட்டணியிலிருந்து வெளியேறுறதப் பத்தி பாஜக தலைவர்கள் வெளிப்படையாக கருத்து சொல்லிக்கிட்டே வந்தாங்க.. சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் அதிமுகவை எதிர்த்து பாஜகவினர் களமிறங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இப்போ நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நோக்கில் தான் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.கர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் விதமாக, தங்கள் கட்சியில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து இன்று முதல் விருப்ப மனுக்களை பெற உள்ளது பாரதிய ஜனதா கட்சி. தேர்தல்களுக்கு முன் அனைத்து கட்சிகளும் செய்யும் வழக்கமான நடைமுறை தான்னாலும், பாரதிய ஜனதா கட்சித் தலைமையிடமான கமலாலயத்திலிருந்து வரும் தகவல் வேறு விதமா இருக்குது.

சட்டசபை தேர்தல் சமயத்தில், அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், அவர்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கலைங்கிற மனக்கசப்பு இருந்தது. தாங்கள் கேட்ட தொகுதிகளை தராமல் தோற்கக்கூடிய தொகுதிகளை தங்கள் தலையில் கட்டியதாக தொண்டர்கள் முணுமுணுத்தாங்க. தேர்தல் தோல்விக்கும் பாஜக மீதுஅதிமுகவினர் பழிய தூக்கி போட்டாங்க . இந்த பிளவு உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் அதிகரித்தது. குறிப்பா முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிஞ்ச பிறகு, “பாஜக தனித்தே போட்டியிட்டிருக்கலாம்ன்னு பேட்டி கொடுத்தார் மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன். பின்னர் 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் அதிமுகவை எதிர்த்து பாஜகவினர் போட்டியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு பாஜகவினர் 381 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது அக்கட்சித் தலைமையை தனித்து போட்டியிடுவது பத்தி சிந்திக்கவைத்துள்ளது. மேலும், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது சுமத்திவரும் ஊழல் குற்றச்சாட்டுகள், முன்னெடுத்து வரும் போராட்டங்கள், வார இறுதி நாட்களில் கோவில்கள் மூடப்பட்ட விவகாரம், டாஸ்மாக் கடைகள் திறப்பு உள்ளீட்ட பல பிரச்சனைகளில் முன்னெடுத்த போராட்டங்களால் மக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு வளர்ந்திருப்பதாக கட்சித் தலைமை கருதுகிறது. மேலும் எதிர்கட்சியான அதிமுகவை விட அரசியல் களத்தில் திமுக எதிர்ப்பு அரசியலை அதிகமாக முன்னெடுப்பது பாஜக தான் என்று மக்கள் பேசத்தொடங்கிவிட்டனர்.போக்குவரத்து துறைல 9 போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வெளில அடையார் ஆனந்த பவன்ல ஸ்வீட் ஆர்டர் பண்ண டெண்டர் ல திருத்தம் கொண்டு வந்ததையும் 30% கமிஷன் வாங்கப் போறதையும் அண்ணாமலை ஆதாரப்பூர்வமா வெளியிட்ட உடனே முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு ஆவின்ல தான் ஸ்வீட் வாங்கணும்னு உத்தரவு போட்டதுனால ஆவின்ல இந்த தீபாவளிக்கு 84 கோடிக்கு ஸ்வீட் விற்பனையாகியிருக்கு.இதோட அண்ணாமலை நிக்கலை மின்பற்றாக்குறை போக்குறதுக்காக பிஜிஆர் எனர்ஜிங்கிற கம்பெனிய ரெடி பண்ணி ஒரு யூனிட் 20 ரூபாய்க்கு வாங்குறதுக்கு விடியல் அரசு திட்டம் போடுதுன்னு பேட்டி கொடுத்ததும் திமுகவே ஆடிப்போச்சு.அதிமுக உட்கட்சி பிரச்சனையை சமாளிக்கவே ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.க்கு நேரம் போதவில்லை என்பதால் பாஜகவை தமிழகத்தில் எதிர்க்கட்சி போல் ஆக்டிவாக வைக்க முயற்சி செய்கிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதுவரை அமைச்சர்கள் கீதாஜீவன், கயல்விழி செல்வராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி, பழனிவேல் தியாகராஜன் என பலருக்கு எதிராகவும் கேள்விக்கணைகளை வீசியிருக்கிறார்.

இவ்வளவு பிரச்சினைகள் நடந்தும் உண்மையான எதிர்க்கட்சி நாங்கதான்னு சொன்ன அதிமுக மிக்சர் சாப்பிட்டுகிட்டு தான் இருந்தாங்க.அப்புறம் எப்படி கட்சி வளரும்.மறைந்த ஜெயலலிதா அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தப்போ போராட்டம் ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம்னு கட்சிய உயிர்ப்போடு வச்சிருந்தாங்க.ஆனா இப்ப உண்மையான எதிர்க்கட்சியாக பாஜக தான் செயல்பட்டு வருது.

ஆக, நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதுன்னு தொண்டர்கள் கருதுவதாகவும், தலைமை அதனை பரிசீலித்தே இன்று முதல் விருப்ப மனுக்களை பெற உள்ளதாகவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல அதிமுக தலைவர்கள், பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் நீடிக்க விரும்பாதது போலவே பேசிவருவதும், அதிமுகவுக்குள் நிலவும் பல இடியாப்ப சிக்கல்களும் பாஜகவை கூட்டணி முறிவை நோக்கித் தள்ளுவதாகவும் கூறப்படுது. எப்படி இருந்தாலும், ஒரு பக்கம் சசிகலா, டிடிவியால் கடும் நெருக்கடியை சந்தித்துவரும் அதிமுகவுக்கு – பாமகவைப் போல பாஜகவும் தனித்துப் போட்டி என்று அறிவித்தால் அது பெரும் பின்னடைவாய் அமையும்.மேல்மட்ட அதிமுக தலைவர்கள் பாஜக கூட்டணிய விரும்பினாலும் தொண்டர்கள் நிர்வாகிகள் மத்தியில பாஜக வேண்டாம்னு தான் சொல்றாங்க.எது எப்படியோ தமிழக அரசியல் களத்தில அதிமுக அனாதையாக்கப்படுவது உறுதின்னு மட்டும் தெரியுது.