இசையமைப்பாளர் ராலே ராஜனின் “Feel the Spark” வைரல் சாதனை!

சென்னை / பார்சிலோனா – சர்வதேச இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான ராலே ராஜன் (Raleigh Rajan) உருவாக்கியுள்ள “Feel the Spark” பாடல், இணைய தளங்களில் வைரலாகி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்ட இந்த ‘American Pop’ பாடல், வெளியான நான்கு நாட்களிலேயே 3.1 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

சுயாதீனக் கலைஞராக (Independent Artist) இருக்கும் ராலே ராஜன், இந்தப் பாடலின் இசை மற்றும் வரிகளை தானே உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன இசைத் துடிப்பும் சர்வதேச தரமும் இணைந்துள்ள இந்தப் பாடல், இசை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, இதில் இடம்பெற்றுள்ள நவீன ஒலியமைப்பு உலகளாவிய இசை ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த வெற்றி குறித்து ராலே ராஜன் கூறுகையில், “உலகெங்கிலும் இருந்து கிடைக்கும் அன்பால் நான் மிகவும் நெகிழ்ந்துள்ளேன். என் இசையும் வரிகளும் இவ்வளவு விரைவாக மக்களிடம் சேர்ந்தது ஒரு கனவு நனவானது போன்ற உணர்வை தருகிறது. இது இன்னும் தொடக்கம் தான்,” எனத் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ராலே ராஜன், அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து, தமிழின் சங்கப்பாடல்களுக்கு  இசைவடிவம் கொடுத்தவர். சந்தம் என்ற அந்த ஆல்பம் சர்வதேச டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவர் மலையாளப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் இசையமைத்த முதல் தமிழ் படம், இந்த வருடம் வெளியாகவுள்ளது.

Related posts:

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாரின் ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான திரைக்கதை, படம் உருவாவதற்கு முன்பே புத்தகமா...

*’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்!*

நேசிப்பாயா--விமர்சனம் !

கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப்...

'கலர்ஸ் ஆஃப் கோலிவுட்', எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவுக்கு அதிகாரப்பூர்வ தே...

கேம்பிரிட்ஜ் மாணவர்கள் வடிவமைத்த 'ஹெலியா' என்ற மின்சார கார்!

தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு விரைவில் அனுமதி ! இனி பைக் வச்சிருந்தாலே சம்பாதிக்கலாம்..!!