
விர்ச்சுவல் உலகம் நிஜ உலகத்தை சந்திக்கும்போது என்ன மாதிரியான பயங்கரம் நடக்கும் என்பது நெட்ஃபிலிக்ஸின் சமீபத்திய தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ பேசியிருக்கிறது. இந்தத் தொடரில் ரகசியம், சந்தேகம் மற்றும் பல வகையான உணர்வுகளும் காட்டப்பட்டிருக்கிறது. ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தத் தொடர் சைபர்கிரைம் மிஸ்ட்ரியுடன் குடும்பங்களின் ஆழமான உணர்வுகளையும் பிரதிபலித்திருக்கிறது. நாம் பாதுகாப்பு எனக் கருதும் இடமே நமக்கு ஆபத்தாக மாறும்போது நம்பிக்கை, ஏமாற்றுதல் மற்றும் வாழ்தல் எப்படி சிக்கலாகிறது என்பதைப் பற்றிய கதையாகவும் இது இருக்கும். இந்த நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தொடர் இறுதிவரை உங்களை கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
‘தி கேம்’ தொடரின் உண்மையான பவர் பிளேயர் ஷ்ரதா ஸ்ரீநாத் தான். அவர் கதையை முன்னெடுத்து செல்வது மட்டுமில்லாது, கதையில் அவர் ஆதிக்கமும் செலுத்துகிறார். காவ்யா கதாபாத்திரத்தில் அவர் அமைதியான தீவிரத்துடனும் உண்மையான உணர்வுகளுடன் பார்வையாளர்கள் மத்தியில் கதையை கடத்துகிறார். அவரது நடிப்பு பார்வையாளர்களின் இதயத்துடிப்பை அதிகமாக்கி ஒருவரது முடிவு எப்படி எல்லாவற்றையும் வாழ்வை திசை மாற்றுகிறது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒவ்வொரு கட்டமாக அவிழும் புதிர்: ஒவ்வொரு எபிசோடின் ரகசியமும் பார்வையாளர்களை உள்ளிழுக்கும். பதட்டம், கணிக்க முடியாத கதை சொல்லல் மற்றும் ஒரு பெண்ணின் உண்மைக்கான தீவிர தேடலை ஒரு டீனேஜரின் மர்மமான ஆன்லைன் நட்புடன் இணைக்கிறார் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா. இந்தக் கதை உங்களை கடைசி ஃபிரேம் வரை யூகிக்க வைக்கும் புத்திசாலித்தனமான திருப்பங்களால் நிறைந்துள்ளது.
நம் வாழும் காலத்தை பிரதிபலிக்கும் கதை: டிஜிட்டல் திரைகள் நம் வாழ்வை பெருமளவு ஆக்கிரமித்திருக்கும் வேளையில், இந்தத் தொடர் நிச்சயம் நமக்கு எச்சரிக்கை மணியாக இருக்கும். நமது மிகைப்படுத்தப்பட்ட வாழ்க்கையின் இருண்ட பக்கத்தை பார்வையாளர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட கேம் டெவலப்பர் காவ்யாவின் பயணத்தை இந்தக் கதை பயன்படுத்துகிறது. இது வெறும் புனைக்கதை மட்டுமல்ல, நாம் வாழும் உலகின் பிரதிபலிப்பு.
குழப்பத்தின் மையத்தில் ஒரு குடும்பம்: காதல், இழப்பு மற்றும் குடும்பம் பற்றிய ஆழமான உணர்ச்சிபூர்வமான கதையாக இது உள்ளது. காவ்யாவின் கணவர் மற்றும் அவளது உறவினர்களுடான பிணைப்புடன் சைபர் உலகின் மறுபக்கத்தையும் காட்டுகிறது. ரகசியங்கள் மற்றும் பயத்தில் நெருங்கிய உறவுகள் கூட எவ்வாறு முறிந்து போகும் என்பதையும் இந்தக் கதை தெளிவாக பிரதிபலிக்கிறது.
ரகசியங்களாலும் மௌனத்தாலும் சோதிக்கப்படும் காதல்: ‘தி கேம்’ தொடரில் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் இடையேயான கெமிஸ்ட்ரி இயல்பாகவும் பல அடுக்குகள் கொண்டதாகவும் உள்ளது. காதலுக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் சிக்கியிருக்கும் ஜோடியாக, அவர்களின் பிணைப்பு கதைக்கு மென்மை மற்றும் பதற்றம் இரண்டையும் கொண்டு வருகிறது. அவர்களது பார்வையும் மெளனமும் வார்த்தைகளால் சொல்ல முடியாததைச் சொல்கிறது. அவர்களின் உறவு குழப்பத்திலேயே நீடிக்கிறது.
ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத், சந்தோஷ் பிரதாப்பின் அட்டகாசமான நடிப்பில் வெளியாகியுள்ள இந்தத் தொடர் டிஜிட்டல் உலகில் காதல், உண்மை, துரோகம் ஆகியவற்றை ஆராய்கிறது.
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தொடரை இப்போதே பாருங்கள்!