நடிகை நயன்தாரா நடிக்கும் ‘லேடிசூப்பர் ஸ்டார் 75’*

ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் வழங்கும்,
நீலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில்
நடிகை நயன்தாரா நடிக்கும் ‘லேடிசூப்பர் ஸ்டார் 75’*

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தினை இயக்குநர் ஷங்கரின் முன்னாள் உதவியாளரான நீலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். மேலும் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

ஃபேமிலி என்டர்டெய்னர் படமான இது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் இருக்கும். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை, படக்குழுவினர் சென்னையில் நடத்தி முடித்து விட்டனர். மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பானது திருச்சியிலும், சென்னையின் சில பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படமானது இதுவரை நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்தப் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts:

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

'லவ் டுடே' மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன்

நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா...அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!

அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டி, சினேகா ரெட்டி தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார்!

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கிய 'டான்ஸ் டான் 2' சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது!

'டான்' படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்!