தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாரின் ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான திரைக்கதை, படம் உருவாவதற்கு முன்பே புத்தகமாக வெளியீடு!

தமிழ் சினிமாவின் நூற்றாண்டு கால வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைக்கும் வகையில், விரைவில் வெளியாகவுள்ள ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான திரைக்கதையை (Official Shooting Screenplay) திரைப்படம் உருவாவதற்கு முன்பே புத்தகமாகப் பதிப்பித்து வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படத்தின் திரைக்கதையைப் புத்தகமாக வெளியிடுவது என்பது பொதுவாக, அத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற பின்னரோ அல்லது விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்ற பின்னரோ நடைபெறும் நிகழ்வாக இருந்து வருகிறது. இத்தகைய நடைமுறைக்கு மாறாக, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’, ‘ஆதார்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவரும் ‘திண்டுக்கல் சாரதி’ படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவருமான இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சென்சார்’, திரைப்படம் உருவாவதற்கு முன்பே அதன் முழுமையான திரைக்கதையைப் புத்தக வடிவில் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.இதன் மூலம், தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முழுநீளத் திரைப்படத்தின் திரைக்கதை, படம் திரைக்கு வருவதற்கு முன்பே பொதுமக்களின் வாசிப்புக்குக் கிடைக்கும் முன்னோடியான முயற்சியாக இது அமையவுள்ளது. ‘சென்சார்’ திரைப்படத்தின் தலைப்புடன் கருத்தியல் ரீதியாகவும் தொடர்புடையதாக இந்த முயற்சி அமைந்துள்ளது.

இந்த முன்னோடி முயற்சி குறித்துப் பேசிய இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் கூறியதாவது: “தமிழ் சினிமாவில், திரையில் நட்சத்திரங்களைக் கொண்டாடிய பிறகே நாம் பெரும்பாலும் திரைக்கதையைக் கொண்டாடுகிறோம். ‘சென்சார்’ திரைப்படத்தின் திரைக்கதையைப் படம் வெளியாவதற்கு முன்பே புத்தகமாக வெளியிடுவதன் மூலம், கதையை அதன் அசல் வடிவத்தில் வாசகர்கள் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். திரையில் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன்பே, அது உருவான எழுத்து உலகத்திற்குள் வாசகர்கள் பயணிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இது வெளிப்படைத்தன்மையை நோக்கிய ஒரு முயற்சி மட்டுமல்ல; தமிழ் சினிமாவில் எழுத்துக்கும் திரைக்கதை ஆசிரியர்களின் படைப்பாற்றலுக்கும் உரிய முக்கியத்துவத்தை அளிக்கும் ஒரு முன்னெடுப்புமாகும்.”

புத்தகம் மற்றும் திரைப்படம் தொடர்பான மேலும் விவரங்கள் ஒவ்வொன்றாக விரைவில் அறிவிக்கப்படும்.

Related posts:

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான '#சூர்யா 46 ' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது!

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘அக்கா’ டீசர்!

பிரதர்-- விமர்சனம்.!

PK7 Studios தயாரித்து வழங்கும் "ஜாக்கி"

”உதவும் மனிதம்” சிறப்புவிழா: 300 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் 2026-2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா!

”’அந்த ஏழு நாட்கள்’ படத்தின் கதைக்கு தலைப்பை தேர்ந்தெடுத்ததே பாக்யராஜ் சார்தான்!”

"'டியூட்' படத்தில் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். அதை பிரதீப் ரங்கநாதன் சிறப்பாக செய்திருக்கிறார் "- இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!