சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர் ‘ராஞ்சா’!

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி. குமார் மற்றும் ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர் ‘ராஞ்சா’இளம் திறமைகளை தேடிக் கண்டுபிடித்து திரையுலகில் அறிமுகம் செய்து அடையாளப் படுத்துவதில் முதன்மையாக திகழும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ‘ராஞ்சா’ எனும் புதிய திரைப்படத்திற்காக ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் உடன் இணைந்துள்ளது.

குறும்படம் இயக்கி கவனத்தை ஈர்த்த சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரஜன் மற்றும் இவானா வருண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். அதிரன் சதீஷ், பத்மன் மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சந்தோஷ் ராவணன், “ஒரு இளம் பெண்ணை மையமாகக் கொண்ட இந்த கதையில் அவளை சுற்றி தொடர் மரணங்கள் நடைபெறுகின்றன. எதனால் அவ்வாறு நடக்கிறது, இதன் பின்னணியில் உண்மையில் இருப்பது என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்லும் வகையில் ‘ராஞ்சா’ உருவாகி வருகிறது,” என்றார்.தொடர்ந்து பேசிய அவர், “காதலின் சக்தி அசாத்தியமானது, அபிரிதமானது. ஆக்கும், காக்கும், அழிக்கும் ஆற்றலை கொண்டது அது. இத்தனை வல்லமை மிகுந்த காதலை புதுமையான கோணத்தில், அதே சமயம் அதன் இயல்பு மாறாமல் திரையில் காட்ட முயற்சித்துள்ளோம்,” என்று தெரிவித்தார்.

‘ராஞ்சா’ படத்திற்கு ‘காலங்களில் அவள் வசந்தம்’ புகழ் ஹரி இசையமைக்க, கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் எடிட்டர் அஷ்வின் ‘ராஞ்சா’ படத்தொகுப்பை கையாளுகிறார்.

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி. குமார் மற்றும் ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராஞ்சா’ திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Related posts:

ஒரு புதிய நகரத்திற்கு வரும் ஐந்து நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

தமிழ் இயக்குநர்களிடம் கேளுங்கள் நான் நடிக்க ரெடி.! அல்லு அர்ஜூன்பேட்டி!

உற்றான் திரைப்பட நாயகன் ரோஷன் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. !

பூரி கனெக்ட்ஸின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தில் இருந்து இப்போது ’பிக் புல்’ பாடல் வெளியாகியுள்ளது!

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் YES BANK ? PHONE PE க்கு பாதிப்பு?

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வேம் இந்தியா இணைந்து தயாரித்திருக்கும் 'அகத்தியா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !

டிரைவிங் லைசென்ஸ் பெற வந்துவிட்டது தொழில்நுட்பம் !

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் வெப் சீரிஸான 'தி கேம்: யு நெவர் பிளே அலோன்' நாளை (அக்டோபர் 2) ப்ரீமியர் ஆகிறது!