‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் (அக்டோபர் 2) மறுவெளியீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரத்யேகமான முன்னோட்ட காட்சிகள் மற்றும் ரசிகர்களுக்கு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ஸ்பெஷல் மெசேஜ்!
‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் மறு வெளியீட்டை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வெளிவர இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் இதுவரை பார்த்திடாத பிரத்யேக முன்னோட்ட காட்சிகள் பெரிய திரையில் திரையிடப்படுகிறது. படம் தொடங்குவதற்கு முன்பாக அகாடெமி விருது வென்ற இயக்குநர்ஜேம்ஸ் கேமரூனின் தனிப்பட்ட குறுஞ்செய்தியும் ரசிகர்களுக்கு திரையிடப்படும். இதில் அவதாரின் அடுத்த அத்தியாயத்தின் திரைக்கு பின்னால் நடந்த நிகழ்வுகளையும் பார்ப்பார்கள்.
சல்லி குடும்பத்துடன் ஸ்பைடர் விண்ட்ரேடர்ஸைச் சேர்ந்த கம்பீரமான மெடுசாய்டுகள், பரந்த ஜெல்லிமீன் போன்ற உயிரினங்களில் பயணிப்பதில் இருந்து இந்த பிரத்யேக காட்சி தொடங்குகிறது. அவர்களுடன் ட்லாலிம் குல தலைவரான டேவிட் தெவ்லிஸின் பெய்லாக் இந்த ஃபிரான்சைஸில் அறிமுகமாகிறார். மேலும், இதில் ஜேக் சல்லி மற்றும் விண்ட்ரேடர்ஸின் புதிய கூட்டணியும் உறுதியாகியுள்ளது.
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கண்ணைக் கவரும் காட்சிகள், உணர்வுப்பூர்வமான விஷயங்கள், அதிர்ச்சியூட்டம் தருணங்கள் என முன்னெப்போதையும் விட இன்னும் ஆழமாக பண்டோராவின் உலகத்திற்குள் பார்வையாளர்களை இந்த முன்னோட்டம் அழைத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகளை வெளியிடும் முதல் நிகழ்வாக இது அமையும். அதீத எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தத் திரைப்படம் ரசிகர்களை சீட்டின் நுனியில் நிச்சயம் அமர வைக்கும்.
இந்த அற்புதமான சினிமா அனுபவத்தைத் தவற விடாதீர்கள்! ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை பெரிய திரையில் கொண்டாடி பண்டோரா உலகின் எதிர்காலத்தைப் பற்றிய மறக்க முடியாத அனுபவத்தைப் பெறுங்கள்.