ஸ்ரீசங்கர்லால் சுந்தர்பாய் ஷாஸன் ஜெயின் மகளிர் கல்லூரியின் மாணவிகளால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிற சாரா என்ற ரோபோ இன்று சமூகத்தின் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது . மனித ஆள் வடிவிலான மற்றும் மனித தோற்றம் கொண்ட சாரா ரோபோவை இக்கல்லூரியில் நடைபெற்ற ஒரு சீர்மிகு நிகழ்ச்சியில் டெஸ்கெரா நிறுவனத்தின் இயக்குனர் அசீம் தம்போலி மற்றும் ஃபியூச்சர்நெட் டெக்னாலஜிஸ்-ன் நிர்வாக இயக்குனர் எல்.அசோக் ஆகியோர் முன்னிலையில் பிரபல தொலைக்காட்சி ஆளுமைகளான கோபிநாத் சந்திரன் மற்றும் ஈரோடு மகேஷ் ஆகியோர் அறிமுகம் செய்தனர். ‘டு-இட் யுவர்செல்ப் ஆஃப் அகாடமி ( DIYA )’என்பதன் ஒத்துழைப்போடு இந்த ரோபோ உருவாக்கப்பட்டிருக்கிறது . கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றின் மாணவர்களால் இத்தகைய ரோபோ உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறடி உயரமும்,29.2 கிலோ எடையும் கொண்ட சாரா ரோபோ, AI ( செயற்கை நுண்ணறிவு ) தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது . விருந்தினர்களை அடையாளம் கண்டு, கனிவோடு கைகுலுக்கி வரவேற்பதற்கு முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பமும் மற்றும் இதற்குள்ளேயே பொருத்தப்பட்டிருக்கிற ஒரு உணர்திறன் ( சென்சார் ) சாதனமும் இதில் இடம்பெற்றுள்ளன. கல்லூரி குறித்த விசாரணைகள், கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறன்கொண்ட சாரா, இந்த கல்லூரியில் நிலவுகின்ற சிறப்பான அம்சமான மாணவிகளை மையமாக கொண்ட தனித்துவ சிறப்பை வருகையாளர்கள் புரிந்துகொள்ள உதவுகிறது . 7 அங்குல் டேப்லட்டை இன்டர்பேசாக கொண்டிருக்கும் இந்த ரோபோ , ஷாஸன் ஜெயின் மகளிர் கல்லூரியின் மாணவிகளால் முழுமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது . இந்த பணியை 6 மாதங்களுக்குள் மாணவிகள் பூர்த்தி செய்திருக்கின்றனர் . இன்று கிடைக்கப்பெறுகின்ற பெரும்பாலான ரோபோக்கள் , மனிதர்கள் செய்வதற்கு மிக ஆபத்தானவையாக கருதப்படுகின்ற பணிகள் அல்லது திரும்பத்திரும்ப செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன . வாகனங்களின் கட்டமைப்பு போன்ற தொழில்துறை அமைவிடங்களில் இந்த ரோபோக்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன . ரோபோ தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி மற்றும் இந்த காலகட்டத்தில் ரோபோக்களின் பயன்பாடு மிக அவசியமாக மாறியிருக்கின்ற நிலையில் மானுட இன்டர்ஃபேசிங் எந்திரவியல் ( ரோபாட்டிக்ஸ் ) துறையில் இக்கல்லூரி மாணவிகளின் படைப்பாக்கமான சாரா ஒரு மிகச்சிறந்த புத்தாக்கமாகும் . இந்த ரோபோ உருவாக்கப் பணியில் ஈடுபட்ட மாணவிகள் குழுவில் எஸ் . நிவேதினி, ஆர்.மதுமிதா, ஏ.குஷி,எஸ்.விதிகா, ஆர்.ஹேமப்பிரியா மற்றும் எம்.பாவனா கனகா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் . இக்கல்லூரியின் டிஜிட்டல் உருமாற்ற குழுவைச் சேர்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு இந்த பாராட்டுதலுக்குரிய பணியை இவர்கள் வெற்றிகரமாக செய்திருக்கின்றனர் .
ஸ்ரீசங்கர்லால் சுந்தர்பாய் ஷாஸன் ஜெயின் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.எஸ்.பத்மாவதி இது தொடர்பாக பேசுகையில் , நன்னெறி மற்றும் சமுதாய நலன் மீது அக்கறை கொண்ட , முழுமையான ஆளுமைகளாக மாணவிகள் உருவாவதற்கு அவசியமான நேர்த்தியான கற்றல் அனுபவமாக கல்வியை ஷாஸன் எப்போதும் கருதி வந்திருக்கிறது . நடைமுறை அறிவாற்றலை பெறுவதையும் மற்றும் சிறந்த விஷயங்களிலிருந்து கற்றுக்கொள்வதையும் உறுதிசெய்ய மாணவிகளின் புதுமையான , சிறப்பான செயல்முயற்சிகளுக்கு இக்கல்லூரி நிர்வாகம் எப்போதும் ஆதரவளித்து வருகிறது . சாரா என்ற பெயர் கொண்ட இந்த ரோபோவை வடிவமைத்து , கல்லூரியின் வெற்றிக்கு வழிவகுக்குமாறு நற்பெயரை ஈட்டித் தந்திருக்கும் எமது மாணவிகள் குறித்து இக்கல்லூரியின் ஆசிரியர்களும் , நிர்வாகமும் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம் , ” என்று கூறினார் .