வோடபோன் ஐடியா சேவைகளுக்கான கட்டணங்கள் டிசம்பர் முதல் உயர்வு ?

கடனில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் வோடபோன் ஐடியா நிறுவனம், நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், அதன் மொபைல் சேவைகளுக்கான கட்டணங்களை, டிசம்பர் முதல் தேதியிலிருந்து அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவங்களை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக, சேவைகளுக்கான கட்டணங்கள், டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் அதிகரிக்கப்பட உள்ளது.இவ்வாறு அதன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எந்தெந்த சேவைகளுக்கு, எவ்வளவு கட்டண உயர்வு என்பது குறித்த எந்த விபரங்களையும் வோடபோன் ஐடியா வெளியிடவில்லை. செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், வோடபோன் ஐடியா நிறுவனம், இதுவரை இந்திய சரித்திரத்தில் எந்த நிறுவனமும் கண்டிராத அளவுக்கு, 50 ஆயிரத்து, 921 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்துள்ளது. சரிசெய்த மொத்த வருமானம் குறித்த வழக்கில், கடந்த மாதம், உச்ச நீதிமன்றம், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக, வழக்கு தொடர்ந்த மத்திய அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது.இதன் காரணமாக, பாக்கி தொகையை கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு, நிதி அழுத்தத்தில் சிக்கியது, வோடபோன் ஐடியா.

Related posts:

தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு ரோட்டரி கிளப் நிதியுதவி!
சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் சட்டம் !
மிஸ் டிபேட்டர் எனப் பெயரிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர் !
எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் தமிழ்நாடு கிராம வங்கியுடன் கார்ப்பரேட் ஏஜென்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
தடையிலிருந்து விலக்கு பெற்றது சாரிடான் மாத்திரை!
சுஜித்தை மீட்க மணிகண்டன் குழு நடத்திய முயற்சியில் பின்னடைவு..?
கிரீன் கார்டு வேணுமா? அதிகமா சம்பாதியுங்க - அமெரிக்கா அறிவிப்பு!
செவிலியர் கவுன்சிலில் திருநங்கை ரக்‌ஷிகா பெயர் பதிவு செய்ய நீதிபதி உத்தரவு..!