வீட்டுக்கு ஒரு தொழில்முனைவர் ! எழுமின் அமைப்பின் இலட்சிய முழக்கம் !!ஜெகத் கஸ்பர் பேச்சு !!!

எழுமின் – தி ரைஸ் அமைப்பு நடத்தும் மூன்றாம் உலகத்தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு இவ்வாண்டு நவம்பர் 14,15,16 நாட்களில் சென்னை நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்தவக் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது . மலேசியா , சிங்கப்பூர் மியன்மார் , ஆஸ்திரேலியா , அமெரிக்கா , கனடா , தென் ஆப்ரிக்கா பிரித்தானியா , ஜெர்மனி , நார்வே , பிரான்ஸ் , சுவிட்சர்லாந்து , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , ஒமான் , கத்தார் , குவைத் , பஹ்ரைன் , சிறிலங்கா , மொரிசியா ‘ உள்ளிட்ட 35 – க்கும் மேலான உலக நாடுகளிலிருந்து வரும் தமிழ்த் தொழிலதிபர்கள் – திறனாளர்களை சந்திக்கவும் , தொழில் வணிக உறவுகள் உருவாக்கிக் கொள்ளவும் அரிய வாய்ப்பாக இம்மாநாடு அமையும் என்று. எழுமின் அமைப்பினை நிறுவியவர் அருட்திரு தமிழ்ப்பணி ஜெகத் கஸ்பார் பேசினார் .

இது குறித்து ஜெகத் கஸ்பர் நுங்கம்பாக்கம் பெண்கள் கிருத்துவ கல்லூரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது:
எழுமின் அமைப்பு முதல் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாட்டினை கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை மாநகரிலும், இரண்டாம் மாநாட்டினை மலேசியா கோலாலம்பூர் சைபர் யோ பல்கலைக் கழகத்திலும் நடத்தின . கடந்த மே மாதம் நடந்த மலேசியா மாநாட்டில் பங்கேற்ற தமிழ்த் தொழிலதிபர்களுக்கிடையே 102 தொழில் வணிக புரிந்துமை ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவற்றில் சுமார்,70 ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஓராண்டு காலத்திற்குள் மூன்று உலக மாநாடுகள் நடத்திய தன மறப்பினையும் எழுமின் அமைப்பு சாதித்துள்ளது . ஐக்கிய நாடுகள் அவை 2030 ம் ஆண்டுக்குள் சாதிக்கப்படவேண்டுமென் வகுத்து TGT நீடித்து நிலைக்கும் வளர்ச்சி இலக்குகளின் அடிப்படையில் எழுமின் அமைப்பு இயங்குகிறது . குறிப்பாக பொருளாதாரத் தேக்க நிலை பற்றிக் கொள்கிற இக்காலத்தில் எல்லோரும் இணைந்து ஒத்துழைத்தால் மட்டும் தாக்குப்பிடிக்க முடியுமெனவும் எழுமின் அமைப்பு நம்புகிறது .

சென்னையில் நடைபெறவுள்ள நவம்பர் மாத மாநாடு IT துறை, ஏற்றுமதி, இறக்குமதி, வணிகம் ,நிதி, எலக்ட்ரானிக்ஸ், லாஜிஸ்டிக்ஸ், மருத்துவம், கல்வி, விவசாயம், இயற்கை விவசாயம், சித்த ஆயுர்வேத மருத்துவம், யோகா, இசை, விளையாட்டு உலகம் முழுதும் தமிழ் கற்பித்தல் உள்ளிட்ட 30 துறைகளை இணைக்கிறது . தமிழரின் முதலீட்டு வலிமையை வலுப்படுத்தும் திட்டங்களையும் இந்த மாநாடு விவாதிக்கவுள்ளது . குறிப்பாக அனைத்துலக அளவில் தமிழ்மொழி சார்ந்த சிறு முதலீட்டாளர்களை இணைக்க நிதி நிபுணர் மோகன் குமாரமங்கலம் தலைமையில் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது . சிறு-குறு தொழில்கள் தொடங்க விரும்பும் இளையர்களுக்கு இந்நிதி பேருதவியாக அமையும் . அத்துடன் தமிழர் தொழில் வணிக வளர்ச்சிக்கென பல்வேறு நாடுகளில் சிறப்பு அலுவலகங்களையும் The Rise எழுமின் அமைப்பு நிறுவுகிறது . இம்மாநாட்டின்போது மிக முக்கியமான பல அனைத்துலக தமிழர் தொழில் வணிக வளர்ச்சிக்கான அமைப்புகளும் தொடங்கப்படவுள்ளன . அனைத்துலக தமிழ் ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் கூட்டமைப்பு , அனைத்துலக தமிழ் பட்டயக்கணக்கர்கள் மற்றும் நிதி மேலாண்மையாளர்கள் கூட்டமைப்பு, அனைத்துலக தமிழ் சில்லறை வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பு , தமிழருக்கான வங்கி நிறுவுதல் , தமிழர் தயாரிப்புகள் சேவைகளை சந்தைப்படுத்த அனைத்துலக அளவிலான சிறப்பு நிறுவனம் போன்றவை முக்கியமானவையாகும்.அதன் இந்தியத் தலைவர் மூத்த வழக்கறிஞர் காந்தி எழுமின் அமைப்பின் ஆசிய – பசிபிக் மற்றும் ஆசியான் பிராந்திய ஒருங்கிணைப்புத் தலைமையகமாக மலேசியா திகழ்கிறது . இப்பிராந்தியத்திற்கான ஒருங்கிணைப்பு இயக்குநராக த்ரா மலேசியா தலைவர் சரவணன் சின்னப்பன் செயற்படுகிறார் . எதிர்வரும் மாநாட்டில் மலேசியாவிலிருந்து மட்டுமே நூற்றுக்கும் மேலான பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் எனவும் , ஆசிய – பசிபிக் பிராந்தியத்திலிருந்து மொத்தமாக சுமார் 200 தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் பங்கேற்கவுள்ளார்கள் . சிறப்பாக’வீட்டுக்கு ஒரு தொழில்முனைவர்’ என்ற முழக்கம் இலட்சிய முழக்கமாக இயக்கமாகவும் முன் வைக்கப்படவுள்ளது என்றார். பேட்டியின் போது ஆடிட்டர் ஜான் மோரிஸ், பேராசிரியர் சேவியர், Dr.நந்தா, இயக்குநர்கள் சேகர்மனோகர்,சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர். .