வீடுகளில் சோல்மேட் சூரிய மின் பலகைகள் !

வீடுகளில் சூரிய மின் பலகைகளை நிறுவும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், அதை நிறுவ குறைந்தது இரண்டு பணியாளர்கள் வரவேண்டி இருக்கிறது.தவிர, வாடகை வீட்டில், அடுக்கு மாடிகளில் குடியிருப்போருக்கு வசதியாக, சூரிய மின் பலகைகள் வடிவமைக்கப்படுவதில்லை.

இந்தக் குறைகளை போக்கும் விதத்தில் வந்திருக்கிறது ‘சோல்மேட்’ (Solmate). ஜெர்மனியைச் சேர்ந்த ஈ.ஈ.டி., தயாரித்துள்ள சோல்மேட்டை, எவரும் தங்கள் வீட்டில் காலியிடம் அல்லது பால்கனியில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வைத்துவிடலாம். அதிலிருந்து வரும் மின்சாரத்தை சிறிய ஒயர் மூலம் சோல்மேட் மின்கலனில் சேகரித்து வைத்துக்கொள்ளாம்.

சோல்மேட் மின்கலனிலிருந்து ஒரு இணைப்பை நேரடியாக வீட்டின் பிளக்கில் செருகி வைத்தால் போதும். சூரிய மின்சாரத்தில் வீட்டுக் கருவிகளை இயக்கலாம்.சோல்மேட் சூரிய மின்பலகை எடை குறைவானது என்பதாலும், எளிய ஸ்டாண்ட்டைப் போட்டு நிறுவிடலாம் என்பதாலும், நடுத்தர குடும்பங்களில் சோல்மேட்டுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும்.

Advertisement