விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, உடனடி அவசர சிகிச்சை ? சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, உடனடி அவசர சிகிச்சை வழங்குவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய, அரசு செயலர்கள் கூட்டத்தை கூட்டும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.வாகன விபத்து இழப்பீடு கோரி, போலியாக தாக்கலாகும் வழக்குகள் குறித்து ஆய்வு செய்து, பரிந்துரை அளிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, கே.சந்துரு தலைமையில், நிபுணர் குழுவை, உயர் நீதிமன்ற நீதிபதி, பி.என்.பிரகாஷ் நியமித்தார்.

இதையடுத்து, நீதிபதிசந்துரு குழு ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்து வருகிறது. இவ்வழக்கில், நீதிபதி, பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு:விபத்து வழக்குகளில் ஆஜராகும், ஏழு வழக்கறிஞர்களுக்கு எதிராக, போலீசில் புகார் அளிக்கலாம் என, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. வழக்கின் சூழ்நிலையை கருதி, ஏழு பேருக்கு எதிரான புகார், பார் கவுன்சிலின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது.
சட்டப்படி, பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பின், நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும். மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களில், ௫௬ வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போனது குறித்து, ஒரு மாதத்தில், விசாரணை அதிகாரி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.வாகன விபத்தில் சிக்குபவர்களுக்கு, உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டால், உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கு முறையான வழிமுறைகளை வகுக்கும்படியும், நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது.

எனவே, இந்தப் பிரச்னை குறித்து விவாதித்து, அறிக்கை தாக்கல் செய்யவும், வழிமுறைகளை வகுக்கவும், உள்துறை, நிதி, போக்கு வரத்து, சுகாதார துறைகளின் செயலர்கள், டி.ஜி.பி., உள்ளிட்டோர் அடங்கிய கூட்டத்துக்கு, அட்வகேட் ஜெனரல் ஏற்பாடு செய்ய வேண்டும்.விசாரணை, ஆக., ௧ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts:

பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.96,000 கோடி நஷ்டம் ! உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி?
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், மாஸ் நடிகர் என்டிஆர், பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அடுத்து இணையும் ஆக்‌ஷன் திர...
‘மிகமிக அவசரம்’ ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் தமிழ்க்குடிமகன்
'இன்று நேற்று நாளை' மற்றும் 'அயலான்' இயக்குநர் ரவிக்குமார் எழுத்தில் உருவாகும் புத்தம் புதிய, சுவாரசிய காலப்பயணக் கதை
உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் கூட்டணி வைக்கிறது ஜியோ !
‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ - தென்னிந்திய இசைப் பயணம் 2020 !
அந்தகன் - விமர்சனம் !