வாட்ஸ்அப் என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா..!

ஜேன் கௌம் என்றவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர் ஆரம்ப கால கட்டத்தில் அவருடைய செயலிக்கு மூன்று விதிகளை வகுத்து வைத்து இருந்தார்.* அந்த செயலி விளம்பரங்களை எடுத்துக்கொள்ளாது. அனைவருக்கு ஒரு சிறந்த செயலியாகவும், அனைத்திலும் அனுபவமாக இருக்க வேண்டும். அந்த செயலியானது மிகவும் பாதுகாப்பாகவும், வாடிக்கையாளர்களின் தனி சுதந்திரத்தை மதிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இதுவே இவரை தாரக மந்திரமாகும்.

செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வாட்ஸ்அப்பில் வேறெந்த குறுக்கீடுகளும், எந்தகாலத்திலும் இருக்கக்கூடாது என்பதில் இவரும், இவரின் நண்பர்களுக்கும் இருவரும் உறுதியாக இருந்தார்கள்.தங்களின் அனுபவங்களை கொண்டு கடந்த 2009ஆம் ஆண்டு ஜேன் கௌம் மற்றும் பிரையன் ஆக்டன் இருவரும் இணைந்து முதலில் ஒரு சாதாரணi குறுஞ்செயலியை உருவாக்க திட்டமிட்டனர். அதன் பயனாக கிடைத்தது தான் தற்போது நாம் பயன்படுத்தும் “வாட்ஸ்அப்”. தான் புதியதாக உருவாக்க இருக்கும் செயலுக்கு “வாட்ஸ்அப்” என்று ஜேன் கௌம் தான் பெயரிட்டார். ஒவ்வொருவரும் கண்டிப்பாக தங்களது பேச்சை நீட்டிக்க குறுஞ்செய்தி அனுப்பும் போது, அடிக்கடி அப்புறம் என்ன?” (Whats Up?) என்று கேட்போம் இல்லையா?
அதையே தன் நிறுவனத்துக்கும் பெயராக வைத்தார். இதனை தன்னுடைய பிறந்தநாளான பிப்ரவரி 24, 2009ஆம் ஆண்டு அன்று வாட்ஸ்அப் இன்கார்ப்பரேஷனை கலிஃபோர்னியாவில் ஜேன் கௌம் தொடங்கினார்.

வேலை தொடங்கி நன்றாக போய்கொண்டிருந்த நேரத்தில் திடீரென வாட்ஸ்அப்பில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்த பிரச்சனை பல நாட்களுக்கு நீடித்ததால் இருவருக்கும் மன அழுத்தம் உண்டானது. ஒரு கட்டத்தில் இந்த செயலி வேலைக்கு ஆகாது எனவே இந்த ப்ரொஜெக்ட்டை டிராப் செய்யல ஜேன் கௌம் முடிவு செய்தார். ஆனால், பிரையன் ஆக்டன், ஜேன் கௌம்-க்கு அறிவுரைக் கூறி ஊக்கப்படுத்தினார்.சில காலத்திற்கு பின் ஆப்பிள் நிறுவனம் மூலமாக இவர்களுக்கு ஒரு உதவி கிடைத்தது. வாட்ஸ்அப்-ன் அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைத்து கொடுத்தது.இருந்த போதிலும் வாட்ஸ்அப்பிற்கு சொல்ல கூடிய அளவிற்கு வளர்ச்சி இல்லாதது ஒரு பெரும் பிரச்சனையாக இருந்தது. அப்போது பிரையன் ஆக்டனிடம், ஜேன் கௌம் உதவிக்கேட்டார்.

பிரையன் ஆக்டன் தனது யாகூ நண்பர்களிடம் கேட்டு 2 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்கன் டாலர் நிதியை பெற்றுத்தந்தார். இதனால் பிரையன் ஆக்டனுக்கு வாட்ஸ்அப்-ல் இணை நிறுவனர் பதவி கிடைத்தது. அன்று தொடங்கிய வாட்ஸ்அப்-ன் வளர்ச்சி இன்று வரை குறையவே இல்லை.

Related posts:

கேம்பிரிட்ஜ் மாணவர்கள் வடிவமைத்த 'ஹெலியா' என்ற மின்சார கார்!

*மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விர...

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘டைகரியன் ரோர்’ பாடலில் ஹிருது ஹரூனின் எனர்ஜியும் கண்கவர் நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது!*

"தலைநகரம் 2" திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது...

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!