வஸந்த் ரவி – வாங்க சாப்பிடலாம்-முன்னு அழைச்சிருக்கார்!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் வசந்த் ரவி. புகழ் பெற்ற நம்ம வீடு வசந்த பவன் ஹோட்டலின் உரிமையாளார் முத்துகிருஷ்ணனின் மகனான இவர் இங்கிலேண்டில் டாக்டரா ஒர்க் பண்ணி வந்தார்.

ஆனா நடிப்பு மீது கொண்ட லவ்வால் 2017-ஆம் வருஷம் டைரக்டர் ராம் இயக்கத்தில் வெளியான ‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அப் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் நடிச்சதுக்காக சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதுகளை எல்லாம் பெற்றாராக்கும்.

தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் டைரக்‌ஷனில் இவர் நடிப்பில் 2021-ஆம் வருஷம் ரிலீஸான ‘ராக்கி’படம் ரசிகர்கள் மத்தியில் குட் ரெஸ்பான்ஸை வாங்கிப்புட்டதா அவிய்ங்களே சொன்னாய்ங்க.

கூடவே ‘அஸ்வின்ஸ்’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடிச்சார்.இவ்வாறு ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான   கதைக்களத்தைதேர்ந்தெடுத்து நடிச்சு வரும் வசந்த் ரவிஇயக்குனர் நெல்சன்டைரக்‌ஷனில் வந்தஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினியின் மகனாக நடித்து அசத்தினார்

இதை அடுத்து பொன் ஒன்று கண்டேன் படத்தில் நடிச்சு முடிச்சுட்டார்.இப்படி இது வரை A படங்களில் மட்டுமே நடிச்சு பேமஸாகி வருபவர் இப்போ நெக்ஸ்ட் பிராஜெக்ட் குறித்து ஷேர் செய்யும் நோக்கில் மதிய விருந்துடன் வாழ்த்த வாங்கோ-=னு அழைப்பு விடுத்திருக்கிறார்