வசீகர குரல் மன்னன்’ சித் ஸ்ரீராமின் ‘All Love No Hate’-தென்னிந்திய இசைப் பயணம் 2020 !

2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். மண்ணின் மைந்தரான அவர், பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம் 08ம் தேதி சென்னையில் இருந்து துவங்குகிறார்.

‘Noise and Grains’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்குதல், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டு வரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ ஆர் ரஹ்மானின்
‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, எஸ் பி பாலசுப்பிரமணியம் – யேசுதாசின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் ‘மடை திறந்து’ இசை நிகழ்ச்சிகளை நடத்தியது பெருமைக்குரியது.இந்நிறுவனம் தங்களது அடுத்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக, சித் ஸ்ரீராமின் ‘All Love No Hate’ – தென்னிந்திய இசைச் சுற்றுப்பயணத்தை நடத்தவிருக்கிறது. பிப்ரவரி 08ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக துவங்கும் இந்நிகழ்ச்சி, அதனை தொடர்ந்து பிப்ரவரி 23ம் தேதி கொச்சினிலும், மார்ச் 07ம் தேதி மதுரையிலும் மற்றும் மார்ச் 13ம் தேதி பெங்களூரிலும் நடைபெறவிருக்கிறது.

இந்த இசை நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாக, சித் ஸ்ரீராம் ஜனவரி 5 ஆம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் முதல் நிகழ்ச்சியாக மாலை சுமார் 03.00 மணியளவில் சென்ட்ரல் மெட்ரோவிலும், அதனைத் தொடர்ந்து 05.00 மணியளவில் பாண்டி பஜாரிலும், அடுத்ததாக சுமார் 07.00 மணியளவில் வடபழனி போரம் விஜயா மாலிலும் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடினார்.மூன்று இடங்களிலும் ரசிகர்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் தனித்துவமானதொரு வரவேற்பு அவருக்கு கிடைத்தது. அவரது இசை நிகழ்ச்சியை கண்டும், அவரோடு இணைந்து பாடியும், ரசிகர்களும் மக்களும் அவரை மகிழ்வித்து உற்சாகப்படுத்தினர்.

இந்த தென்னிந்திய இசைப் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக வருகின்ற பிப்ரவரி 08ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுகள் விற்பனை துவங்கி இருக்கிறது