கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட் என்றால் என்ன? ஒரு பெரிய கம்பெனிக்கு அவசரமாக பிசினஸ் செய்ய 1,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அவர்கள் வங்கிகளிடம் பேசிப் பார்க்கிறார்கள். வங்கிகளின் கடன் திட்டங்கள் அனைத்தையும் அலசிப் பார்க்கிறார்கள். எதுவும் ஒத்து வரவில்லை. எப்படிக் கணக்குப் போட்டுப் பார்த்தாலும், கடனுக்கான வட்டி விகிதம் 11 %க்கு கீழே வர வில்லை. ஆக நாமே ஒரு கார்ப்பரேட் டெபாசிட் திட்டத்தை அறிவித்து ஒரு நல்ல வட்டிக்கு மக்களிடமே கடன் வாங்குவோம் என்று நிர்வாகக் குழு மற்றும் இயக்குநர்கள் முடிவு எடுக்கிறார்கள். இப்படித் திரட்டப்படும் பிக்ஸட் டெபாசிட்டுக்குத் தான் கார்ப்பரேட் எஃப்.டி என்று பெயர். நிறுவனத்துக்கு என்ன லாபம் இதனால் நிறுவனங்களுக்கு ஒரு சில சதவிகிதம் வட்டி குறைந்து செலவைக் குறைக்கும். செலவு குறைகிறதென்றால் லாபம் கூடத் தானே செய்யும். இப்படி 1000 கோடி ரூபாய்க்கு 1 சதவிகித வட்டி குறைவு என்றால் கூட 10 கோடி ரூபாய் மிச்சம் தானே. இப்படி நிறுவனங்கள் தங்கள் கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்களைத் திரட்ட பல அரசு அமைப்புகளிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.
இந்தத் தகவல்களை எல்லாம் எப்படி உறுதிப்படுத்துவது http://www.iepf.gov.in/IEPF/pdf/GNL2_Filings.pdf இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க. இதுல எந்த கம்பெனிக்கு சட்டப்படி டெபாசிட் வாங்க அனுமதி கொடுத்திருக்காகங்களோ அந்த கம்பெனிங்க பேர் மட்டும் தான் இருக்கும். இத பாத்துட்டு, அந்த கம்பெனி பேர போட்டு இணையத்துல தேடுனாலே அவங்களோடு எஃப்.டிக்கான விளம்பரம் மற்ற விவரங்கள் எல்லாமே கெடச்சிடும். வங்கிகள் ஏன் இதில் இல்லை. வங்கிகள், NBFC-ன்னு சொல்லப்படுற வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ஹவுசிங் ஃபைனான்ஸ் கம்பெனிங்க எல்லாம், இது மாதிரி டெபாசிட் வாங்குறப்ப எல்லாம் அனுமதி வாங்கத் தேவை இல்ல. அவங்க கம்பெனிய பதிவு பண்றப்பவே டெபாசிட் வாங்குறதுக்கு ஆர்பிஐ அனுமதி கொடுத்துடும். அதை எப்படி சரி பார்ப்பது 1. மத்திய ரிசர்வ் வங்கியோட வலைதளத்துல ஒவ்வொரு வங்கி சார்ந்த கம்பெனியோட விவரங்களும் இருக்கும். https://rbidocs.rbi.org.in/rdocs/Publications/PDFs/59260.pdf நேரா இந்த லிங்குக்கு போய், நாமே பாக்க வேண்டிய கம்பெனிய பாருங்க. இந்த லிஸ்ட்ல இருக்குறவங்க மக்கள்கிட்ட இருந்து டெபாசிட் வாங்குறப்போ ரிசர்வ் வங்கி கிட்டயோ மற்ற எந்த அரசு அமைப்பு கிட்டயோ அனுமதி வாங்க அவசியமில்ல. ஹவுசிங் ஃபைனான்ஸ் இங்கே 2. ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் எல்லாமே நேஷனல் ஹவுசிங் பேங்க் அமைப்பின் கீழ தான் நிர்வகிக்கப்படுது. இந்த அமைப்புக்குக் கீழ பதிவு செஞ்சிருக்கிற ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களோடு பட்டியல் இது. https://test.nhb.org.in/List-of-HFCs-Registered-with-NHB-19-02-2016.pdf இதுல பிப்ரவரி 2016 வரையான லிஸ்ட் தான் அப்டேட் செஞ்சிருக்காகங்க. இந்த பட்டியல்ல என்.ஹெச்.பி ஒரு மதிப்பீடும் கொடுத்திருக்கு பாத்தீங்களா. அந்த மதிப்பீடு 1-ன்னா நல்ல கம்பெனின்னு அர்த்தம், 2-ன்னா ஜாக்கிரதையா இருக்கணூம்ன்னு அர்த்தம், 3-ன்னா அந்த கம்பெனி ஆபத்தான நிலைமைல இருக்குன்னு அர்த்தம்