முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி… தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம். !

தமிழகத்தில் அபராதம் குறைகிறது, முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்… டாப்-10 செய்திகள்!
1. மாருதி சுஸுகி ஜிம்னி நமக்கு இல்லை!
வெளிநாடுகளில் சுஸுகி விற்பனை செய்து வரும் ஜிம்னி எஸ்யூவி கார், ஜிப்ஸிக்கு மாற்றாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்திய ஆஃப் ரோடு பிரியர்கள் மத்தியில் ஆவலை தூண்டியிருந்த மாருதி சுஸுகி ஜிம்னி அறிமுகம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அபராதம் குறைகிறது, முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்… டாப்-10 செய்திகள்!
2. சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்!
ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் நம்ப முடியாத மிக குறைவான விலையில் சீனாவில் லான்ச் ஆகியுள்ளது. அடுத்ததாக இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

3. முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்!
மாதச் சந்தா திட்டத்தில் புதிய மஹிந்திரா கார்களை பெற்று பயன்படுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4. நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!
வாகன விற்பனை சரிவடைவதற்கு ஓலா, உபர் நிறுவனங்களும் ஒரு காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு மாருதி சுஸுகி நிறுவனம் பதில் அளித்துள்ளது.

5. எம்ஜி ஹெக்டரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்!
இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய உடனேயே சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இந்த காரின் நீண்ட காத்திருப்பு காலத்தை பயன்படுத்தி கொண்டு, இதன்மூலம் அவர்கள் சில லட்சம் லாபம் ஈட்டுகின்றனர்.

6. தமிழக அரசு பஸ்களின் சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன?
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாநகரிலும், பல்வேறு வசதிகளுடன் கூடிய சிகப்பு நிற டவுன் பஸ்கள் வெகு விரைவில் இயக்கப்படவுள்ளன.

7. வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி-மத்திய அரசு அதிரடி முடிவு?
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில், வாகனங்கள் மீதான வரியை குறைப்பது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என ஆட்டோமொபைல் துறை எதிர்பார்த்துள்ளது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய வாகனங்களை வாங்க முடிவு செய்திருந்தவர்களுக்கும் இந்த தகவல் கவலையை அளித்துள்ளது.

8. செருப்பு அணிந்து கொண்டு டூவீலர் ஓட்டக்கூடாது!
இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது செருப்பு அணிய கூடாது என்ற விதிமுறை இந்தியாவில் இருப்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே இப்படி ஒரு விதிமுறை இருந்து வருகிறது.

9. வெறும் 100 ரூபாய் போதும்-அபராதம் கட்ட தேவையில்லை!
வெறும் 100 ரூபாயில் காப்பாற்றும் ஒரு சூப்பர் ரூல் இருப்பது தெரியாமல், ஆயிரக்கணக்கான ரூபாயை வாகன ஓட்டிகள் அபராதமாக இழந்து வருகின்றனர்.

10. தமிழகத்தில் அபராதம் குறைகிறது?
புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில், குஜராத் மாநில அரசை போல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசும் அபராத தொகைகளை குறைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.