மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதிக்க தென்னகரயில்வே குழுக்கள் !

நவம்பர் 6ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தையடுத்து, தமிழக காவல்துறையின் முயற்சியுடன் ,தென்னக ரயில்வேயுடன் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, தென்னக ரயில்வேயின் ஜோனல் அளவிலும் , சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்ட அளவிலும் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதிக்க ,முதுநிலை(SAG – Senior Administrative Grade)மற்றும் இளநிலை(JAG- Junior Administrative Grade) மேலாளர்கள் அளவிலான பல்வேறு குழுக்களை உருவாக்க தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் திரு ஜான் தாமஸ் அவர்கள் முறைப்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்

இது டிசம்பர் 3 இயக்கத்தின் மாவட்ட ,மாநில தலைவர்கள் மற்றும் தமிழக காவல்துறை மற்றும் பத்திரிக்கையாளர்களின் பெரிய வெற்றி. இந்தியாவிலேயே, மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படுவது இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.