மருத்துவர்-நோயாளிக்கு இடையேயான உறவுகள் பற்றிய புத்தகம் ! டாக்டர் மோகன் வெளியிட்டார் !

மருத்துவர் – நோயாளிக்கு இடையேயான உறவுகள் பற்றிய ‘ டியர் பீப்புள் , வித் லவ் அன்ட் கேர் , யுவர் டாக்டர்ஸ் ‘ புத்தகம் புகழ்பெற்ற நீரிழிவு நிபுணர் டாக்டர் மோகன் வெளியிட்டார் இதயப்பூர்வமான கதைகளுடன் வெளிவந்துள்ள இந்தியாவின் முதல் புத்தகம் ‘ மருத்துவர் – நோயாளிகள் இடையே உள்ள உறவை குறிக்கும் வகையில் , இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் குழு இந்த புத்தகத்தில் கட்டுரைகள் எழுதியுள்ளது * ப்ளூம்ஸ்பரி பதிப்பகத்தின் வெளியீடாக இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது . இந்த புத்தகத்திற்கு தலாய்லாமா முன்னுரை எழுதியுள்ளார் . இந்த புத்தகத்தை டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவரும் தலைமை நீரிழிவு – நிபுணருமான டாக்டர் மோகன் வெளியிட்டார் . ‘ * மருத்துவ உலகில் புதிய கண்ணோட்டத்தை அளிக்கும் இந்த புத்தகத்தை அதன் ஆசிரியர்களான டாக்டர்கள் தேபராஜ் ஷோம் மற்றும் அபர்ணா கோவில் பாஸ்கர் ஆகியோர் அறிமுகம் செய்தனர் . ‘ டாக்டர் மோகனிடம் சிகிச்சை பெறும் பேராசிரியர்கள் எஸ் . வி . சிட்டிபாபு மற்றும் மிஸ்கின் ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் .

. இந்த புத்தகத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் குழு தங்கள் அனுபவங்களை எழுதியுள்ளனர் . இந்தியாவில் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையிலான உரிமைகள் குறித்து இந்த புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது . இந்த புத்தகத்தை மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவரும் தலைமை நீரிழிவு நிபுணருமான டாக்டர் மோகன் வெளியிட இந்த சிறப்பு மையத்தின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம் . அஞ்சனா பெற்றுக் கொண்டார் . இந்நிகழ்ச்சியில் டாக்டர் மோகன் பேசுகையில் , இந்த புத்தகம் மருத்துவர்களின் பார்வைகளையும் , அவர்கள் அனுபவிக்கும் சிரமங்களையும் தெளிவாக விவரித்துள்ளது . மேலும் மருத்துவர் என்பவர் , நோயாளியின் குடும்பத்திற்கு நண்பராகவும் , ஆலோசனை வழங்குபவராகவும் , அந்த குடும்பத்திற்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார் என்று தெரிவித்தார் .

டாக்டர் அஞ்சனா பேசுகையில் , சமுதாயத்தில் மருத்துவர்களின் பங்கு என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் . அவர்கள் மருத்துவர்கள் அல்லது அறுவை சிகிச்சை நிபுணர்களாக மட்டுமல்லாமல் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களின் நல விரும்பிகளாக உள்ளனர் . என்ற சாராம்சத்தை இந்த புத்தகம் விரிவாக விவரித்துள்ளது என்று தெரிவித்தார் . இந்த புத்தகத்தை அதன் ஆசிரியர்களான , புகழ்பெற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரும் , டெபப்ரதா – ஆரோ அறக்கட்டளையின் இணை நிறுவனரும் , இயக்குனருமான டாக்டர் தேபராஜ் , ஷோம் , எடைகுறைப்பு அறுவை சிகிச்சை நிபுணரும் இந்த அறக்கட்டளையின் இணை நிறுவனரும் , இயக்குனருமான டாக்டர் அபர்ணா கோவில் பாஸ்கர் . ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர் . இந்த புத்தகம் மருத்துவ உலகில் ஒரு புதிய கண்ணோட்டத்தை அளிக்கும் . மேலும் மருத்துவர் – நோயாளி உறவில் நம்பிக்கையை ஏற்படுத்த இந்த புத்தகம் 29க்குவிக்கும் ,

இந்த புத்தகம் குறித்து டாக்டர் தேபராஜ் ஷோம் கூறுகையில் , டாக்டர்களை தவறாக கூறுவதையும் , மருத்துவமனைகள் காக்கப்படுவது தொடர்பான செய்திகளையும் நாம் . அடிக்கடி கேட்டு வருகிறோம் . இது கொஞ்சம் கொஞ்சமாக எதிர்மறையாக மாறுகிறது . இதன் காரணமாக மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையே சுமுகமான உறவு  இருப்பதில்லை . இந்த புத்தகத்தின் முக்கிய நோக்கமே மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் இடையே நல்ல உறவை வலுப்படுத்த வேண்டும் என்பது ஆகும் . அதன் காரணமாக இந்த புத்தகத்தில் 30 மருத்துவர்கள் மற்றும் 5 நோயாளிகளின் கதைகள் எழுதப்பட்டுள்ளது . இந்த கதைகள் வெற்றி , அனுதாபம் , நேர்மறை , இழப்பு மற்றும் சில நேரங்களில் தோல்வி , ஆகியவற்றுடன் தொடர்புடையவையாகும் . இது ஒரு படி மேலே போய் மருத்துவரை சுற்றியுள்ள மக்களைப் பற்றி விரிவாக கூறியுள்ளது . ஒரு மருத்துவரின் தாய் , ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் கணவர் மற்றும் ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்துவர் ஆகியோர் பற்றி கூறுகிறது . இந்த கதைகள் , மருத்துவர்களும் மனிதநேயமிக்கவர்கள் . என்பதை அடிக்கோடிட்டு காட்டுகின்றன . இந்த கதைகள் அனைவருக்கும் பக்கமளிக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவித்தார் , பதிலாக இவை மீண்டும் பத்தில் நோய் டாக்டர் அபர்ணா கோவில் பாபகர் கூறுகையில் , ஒரு காலத்தில் மருத்துவர்கள் கடவுளுக்கு இணையாக கருதப்பட்டனர் , ஸ்டெதாஸ்கோப் போற்றப்பட்டது . அவர்களின் கொடுத்தும் குணப்படுத்தலும் விவாதிக்கப்பட்டது . இந்த புத்தகம் ஒரு தொழிலில் என்ன தவறு நடந்திருக்கலாம் என்பதற்கான ஒரு பதிலாக இருக்கக்கூடும் . மருத்துவர்களுக்கும் உலகில் உள்ள மற்றவர்களுக்கும் இடையிலான அழகான உறவை மீண்டும் வலுப்படுத்த இந்த புத்தகம் நிச்சயம் உதவியாக இருக்கும் . முதல் முறையாக இந்த புத்தகத்தில் நோயாளிகளின் உரிமைகளுடன் மருத்துவர்களின் உரிமைகளும் பகிரப்பட்டுள்ளது . இந்த புத்தகத்தில் மருத்துவர் – நோயாளிகள் இடையிலான மனித நேய கதைகள் இடம் பெற்றுள்ளன . இது அனைவரும் எளிமையாக வாசிக்கும்படி எழுதப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் .

தமிழக உயர் கல்விக் குழு முன்னாள் துணைத் தலைவரும் பேராசிரியருமான டாக்டர் எஸ் . வி . சிட்டிபாபு , 99 வயதான தனக்கு கடந்த 40 வருடமாக நீரிழிவு நோய் இருப்பதாகவும் டாக்டர் மோகனின் ஆலோசனைப்படி செயல்படுவதால் நல்ல முறையில் இருப்பதாக தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் . இதேபோல் கணக்கு தணிக்கையாளரும் , திருவாரூர் ஆர்ஏசி கல்லுாரி நிறுவனரும் , திருவாரூர் லயன்ஸ் கண் மருத்துவமனை நிறுவனருமான 91  வயதான பேராசிரியர் எஸ் . எம் , மிஸ்கின் , தனக்கும் டாக்டர் வி , மோகனுக்கும் இடையிலான உறவை பகிர்ந்து கொண்டார் . இந்த புத்தகத்தில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் தங்களின் . குடலியல் மற்றும் எடை குறைப்பு மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரதீப் செளபே , இந்திய மருத்துவ சங்க தேசியத் தலைவர் டாக்டர் ரவி வான்கடேகர் , மூத்த பல் மருத்துவர் நிதின் கடம் , ஆதித்ய ஜாட் இன்ஸ்ட்டிடுட் ஆப் விஷன் சயின்ஸ் அன்ட் ரிசர்ச் மைய டீன் டாக்டர் எஸ் . நடராஜன் , பி . எம் , பிர்லா இருதய ஆராய்ச்சி மையத்தின் இருதய அறுவை சிகிச்சை துறை தலைவரும் மூத்த இருதய அறுவை சிகிச்சை த் கபூர் , கொச்சி மருத்துவ பள்ளியின் தலை மற்றும் கழுத்து .
அறுவை சிகிச்சை துறை தலைவரும் , பேராசிரியருமான டாக்டர் சுப்பிரமணிய அய்யர் , மூத்த கண் மருத்துவரும் , கண் மருத்துவ பேராசிரியரும் , லாஸ் ஏஞ்சல்ஸ் குழந்தைகள் நல மருத்துவமனையின் கண் புற்றுநோயியல் துறை இணை இயக்குனருமான டாக்டர் ஜெசி பெர்ரி , புகழ்பெற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரும் , ஸ்டர்ட்கர்ட் , மரியன் மருத்துவமனையின் பேஷியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செரிக்இன் முத்த . இயக்குனரும் மற்றும் ஜெர்மன் மூக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கவுன்சில் தலைவருமான டாக்டர் உல்ப்கேங் கியூபிச் , மூத்த தோல் நோய் நிபுணர் டாக்டர் கேப்ரிலா . கசாபோனா , இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் எடைகுறைப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்று அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகருமான டாக்டர் கமல் மகாவர் உள்ளிட்ட பலர் தங்கள் கட்டுரைகளை எழுதியுள்ளனர் . டாக்டர் தேபராஜ் ஷோம் டாக்டர் தெபராஜ் ரோம் , முக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் முக ஒப்பனை அறுவை சிகிச்சையில் சிறந்த நிபுணர் ஆவார் .

. டாக்டர் அபர்ணா கோவில் டாக்டர் அபர்ணா கோவில் பாஸ்கர் , மும்பையில் புகழ்பெற்ற எடை குறைப்பு மற்றும் குடலியல் பொது அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார் . இவர் குளோபல் , இந்துஜா , குர்ரே , நமஹா , சுஜக் மற்றும் அப்பல்லோ குழும் மருத்துவமனைகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் . இவர் பல்வேறு பதிப்பகங்களுக்காக ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார் . இவர் பல அறுவை சிகிச்சை சங்கங்களின் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார் . இவர் மருத்துவ ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டவர் ஆவார் , 2016 – ம் ஆண்டு துவக்கப்பட்ட பெப்ரதா ஆரோ ) அறக்கட்டளையின் இணை நிறுவனரான இவர் ஏழை எளிய மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகிறார் . இவர் தீவிர புத்தக வாசிப்பாளரும் கலைஞரும் ஆவார் , டியர் பீப்புள் , வித் லவ் அன்ட் கேர் , யுவர் டாக்டர்ஸ் புத்தகம் பற்றி இந்த புத்தகம் உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் இதயப்பூர்வமான கதைகளின் தொகுப்பாகும் .