மருத்துவக் கழிவுகள் பற்றிய படம் ‘கல்தா’.!

மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கல்தா’.ஹரி உத்ரா இயக்கத்தில், ஜெய் கிரிஷ் இசையமைப்பில், சிவநிஷாந்த், ஆண்டனி, அய்ரா, திவ்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.வெளிமாநிலத்திலிருந்து வரும் மருத்துவக் கழிவுகள், நம் தமிழ்நாட்டில் வந்து கொட்டப்படுவதால் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதைச் சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படம் பற்றி இயக்குநர் ஹரி உத்ரா கூறியதாவது,

‘கல்தா’ங்கிறது வழக்கமா நம் வாழ்க்கையில் கையாளுற சொல்லாடல் தான். அரசியல்வாதிகள் தொடர்ச்சியா மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்காங்க. அதை அடிப்படையா கொண்டுதான் இந்த டைட்டில் வைத்தோம்.அரசியல் பழகு அப்படிங்கிறது தான் இந்தப்படம் சொல்லும் கருத்து. கமர்ஷியல் கலந்த இயல்பான படமா இதை உருவாக்கி இருக்கோம். நிஜத்தில் இங்க நடந்துட்டு இருக்குற சம்பவங்கள மையமா வச்சு இந்தப் படம் உருவாகியிருக்கு.

எல்லோருக்கும் பிடிக்கிற வகையில் படம் இருக்கும். ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி என்னுடைய நெடு நாள் நண்பர். நான் கதை சொன்ன பிறகு ரொம்ப ஈடுபாட்டோட இதில் நடிச்சி கொடுத்திருக்கார். புதுமுக நாயகன் சிவ நிஷாந்த் ரொம்ப அருமையா நடிச்சிருக்கார்.அப்பாவைப் பற்றி ஒரு அற்புதமான பாடல் வைரமுத்து எழுதியிருக்கார். இந்தப் படம் எடுப்பதில் நிறைய சிக்கல்கள் இருந்தது அரசியல் கலந்து இருந்தாலும் ரொம்ப தைரியமா இந்தப் படத்த தயாரிச்சிருக்கார் ரகுபதி சார்.

ஒரு தரமான கமர்ஷியல் படமாவும் இத உருவாக்கி இருக்கோம். படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்திட்டு இருக்கு. பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கோம்,” என்றார்.

Related posts:

நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் ஸ்டேஷன் !மத்திய அரசு வழிமுறைகளை வகுத்துள்ளது !!
இந்த 5 ரகசிய ஆப்ஸ் (Secret Apps) உங்கள் மொபைலில் இருக்கா..?
படிப்பு தான் முக்கியம் என்பார் அப்பா! தந்தையைப் பற்றி பாடகி எஸ்.பி. ஷைலஜா!!
வசீகர குரல் மன்னன்’ சித் ஸ்ரீராமின் ‘All Love No Hate’-தென்னிந்திய இசைப் பயணம் 2020 !
கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68 !
“ஓ மை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு - ஹைலைட்ஸ்!
ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' பத்திரிகையாளர் சந்திப்பு !!
லாரி ஓட்டுவது எளிதல்ல? 'கைதி' பற்றி கார்த்தி !