பைல்ஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி !

ஹெமோராய்டுகள் பைல்ஸ் என்னும் மூல நோயுடன் தொடர்புடையது. ஹெமோராய்டுகள் என்பவை ஆசனவாயின் வெளியே அல்லது கீழ் மலக்குடலைச் சுற்றியுள்ள நரம்புகளின் வீக்கம் ஆகும். மலக்குடல் என்பது ஆசனவாய்க்கு வழிவகுக்கும் மனித உணவுக் கால்வாயின் கடைசி பகுதியாக உள்ளது. இங்கு தான் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. பைல்ஸ் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு. குடலியக்கத்தின் போது, நோயாளி கடுமையான வலி, எரிச்சல் மற்றும் இரத்த போக்குக்கு ஆளானால், அவருக்கு பைல்ஸ் உள்ளது என்று அர்த்தம். ஒருவருக்கு பைல்ஸ் டயட்டில் போதுமான நார்ச்சத்து இல்லாமை, உடல் பருமன், மலம் கழிக்கும் போது மலக்குடலில் அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுப்பது போன்றவற்றால் ஏற்படலாம். அதோடு வயது அதிகரிப்பதாலும் ஏற்படலாம். ஏனெனில் ஒருவரின் வயது அதிகரிக்கும் போது, இணைப்புத் திசுக்களும் முதுமையாவதால், மலக்குடல் மற்றும் ஆசன வாய் பலவீனமாகிறது. சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பைல்ஸ் பிரச்சனையை ஏற்படலாம்.

ஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா? பைல்ஸ் இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அவையாவன: இரத்தம் கலந்த மலம் வெளியேறுவது, ஆசன வாயில் வலி மற்றும் கடுமையான அரிப்பு, மலம் கழிக்கும் போது கடுமையான வலியை அனுபவிப்பது. இப்பிரச்சனை இருந்தால், காரமான உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மேலும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

இப்போது பைல்ஸ் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், எந்த மாதிரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றினால், பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் டயட் திட்டம்: அதிகாலை – வெதுவெதுப்பான நீர் + 1 டீஸ்பூன் ஆளி விதை, கற்றாழை ஜூஸ்/ அருகம்புல் ஜூஸ் காலை உணவு – கோதுமை கஞ்சி/ வெஜ் உப்புமா/ வெஜ் சேமியா/ வெஜ் இட்லி/ ரொட்டி/ ஒட்ஸ்/ ஸ்டப்டு சப்பாத்தி/ சப்பாத்தி காய்கறிகள் அல்லது தால் உடன். காலை உணவிற்கு பின் – பழங்கள்/ பழச்சாறு/ ஹெர்பல் டீ/ இளநீர்/ தேங்காய் பால்/ எலுமிச்சை ஜூஸ் மதியம் – சப்பாத்தி + கைக்குத்தல் அரிசி சாதம் + சாலட் + காய்கறி பொரியல் + தால்/ சிக்கன் (வாரம் ஒரு முறை) சாயங்காலம் – வறுத்த கடலை/ சூப்/ சேமியா பாயாசம்/ மூலிகை டீ/ க்ரீன் டீ/ முளைக்கட்டிய பயிர்கள் இரவு உணவு – சப்பாத்தி + காய்கறிகள் + தால்

தானியங்கள் சாப்பிட வேண்டியவை: கோதுமை, அரிசி, கைக்குத்தல் அரிசி, திணை, குதிரைவாலி, பக்வீட் தவிர்க்க வேண்டிவை: சுத்திகரிக்கப்பட்ட மாவு வகைகள் பழங்கள் சாப்பிட வேண்டியவை: ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, முலாம் பழம், அவகேடோ, பீச், பேரிக்காய், மாதுளை, அனைத்து வகையான பெர்ரி பழங்கள், அத்திப்பழம், மாம்பழம், லிச்சி, சீத்தாப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, சப்போட்டா, அன்னாசி, திராட்சை. தவிர்க்க வேண்டியவை: அளவுக்கு அதிகமாக வாழைப்பழம், கேனில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகள். காய்கறிகள் சாப்பிட வேண்டியவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு, இஞ்சி, செலரி, கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, முள்ளங்கி, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கேல், காளான், பசலைக்கீரை, கேரட், பட்டாணி, வெந்தயக் கீரை, உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய் தவிர்க்க வேண்டியவை: கேனில் அடைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் உறைய வைக்கப்பட்ட காய்கறிகள் பருப்பு வகைகள் அனைத்து வகையான பருப்பு வகைகளையும் பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் தங்களின் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். எதுவாயினும் அளவாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.

பால் பொருட்கள் சாப்பிட வேண்டியவை: கொழுப்பு குறைவான பால், டோஃபு, சீஸ், தயிர், யோகர்ட், மோர், காட்டேஜ் சீஸ். தவிர்க்க வேண்டியவை: கொழுப்பு அதிகமான பால் மற்றும் க்ரீம், கொழுப்பு அதிகமான யோகர்ட், க்ரீம் சீஸ், கண்டன்ஸ்டு மில்க் மசாலாக்கள் சாப்பிட வேண்டியவை: சீரகம், மல்லி, மஞ்சள், சோம்பு, பட்டை, ஓமம் தவிர்க்க வேண்டியவை: சிவப்பு மிளகாய், மிளகு பானங்கள் குடிக்க வேண்டியவை: இளநீர், க்ளியர் சூப், கரும்பு ஜூஸ், வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப், க்ரீன் ஜூஸ், ஹெர்பல் டீ, கற்றாழை ஜூஸ், அருகம்புல் ஜூஸ், மோர், பால், மில்க் ஷேக்குகுள், ஸ்மூத்திகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஜூஸ்கள் தவிர்க்க வேண்டியவை: கொழுப்பு நீக்கப்படாத முழு பால் நிறைந்த பானங்கள், க்ரீம் வகை பானங்கள், கேன் சூப்புகள் மற்றும் டப்பாவில் அடைக்கப்பட்ட சூப்புகள், மது, கார்போனேட்டட் பானங்கள் இறைச்சி உணவுகள் சாப்பிட வேண்டியவை: முட்டை வெள்ளைக்கரு, வறுத்த கோழி, க்ரில் மீன், மட்டன், தோல் நீக்கப்பட்ட சிக்கன் தவிர்க்க வேண்டியவை: பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த இறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கானாங்கெளுத்தி மீன், சுறா . விதைகள் மற்றும் உலர் பழங்கள் பாதாம், உலர் திராட்சை, வேர்க்கடலை, வால்நட்ஸ், ஹாசில் நட்ஸ், பிஸ்தா, முந்திரி, பூசணி விதைகள், சியா விதைகள், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள், எள்ளு விதைகள் போன்ற அனைத்தையுமே சாப்பிடலாம்.
எண்ணெய்கள் சாப்பிட வேண்டியவை: பசுமாட்டு நெய், சூரியகாந்தி எண்ணெய், கனோலா எண்ணெய், ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய், ரைஸ் ப்ரன் ஆயில் தவிர்க்க வேண்டியவை: க்ரீம், பாமாயில், தேங்காய் எண்ணெய், வெண்ணெய் தவிர்க்க வேண்டிய மற்ற உணவுகள் பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜங்க் உணவுகள், ஊறுகாய், செயற்கை சுவையூட்டிகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை நினைவில் கொள்ள வேண்டியவை: * தினமும் சரிவிகித உணவு முறையை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். * நார்ச்சத்து அதிகமான உணவுகளை உண்ண வேண்டும். * பழச்சாறுகளுக்கு பதிலாக பழங்களைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். * உணவுகளைத் தவிர்க்கக்கூடாது. குறிப்பாக காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. * தினமும் தவறாமல் குறைந்தது 8-10 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். தினமும் அதிகளவு நீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.