பூரி கனெக்ட்ஸின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தில் இருந்து இப்போது ’பிக் புல்’ பாடல் வெளியாகியுள்ளது!

உஸ்தாத் ராம் பொதினேனி, சஞ்சய் தத், பூரி ஜெகன்நாத், சார்மி கவுர்,

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயகனாகவும், சஞ்சய் தத் வில்லனாகவும், காவ்யா தாபர் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இன்று, படத்தில் இருந்து பிக் புல் என்ற சிறப்பு பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பூரி ஜெகன்நாத் தனது படத்தில் கதாநாயகனுக்கு இணையாக வில்லனுக்கும் வலுவான கதாபாத்திரம் கொடுப்பதில் பெயர் பெற்றவர்.  இப்போது, ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் ஒருபடி மேலே போய், சஞ்சய் தத்தின் வில்லன் கதாபாத்திரத்திரமான பிக் புல்-க்கு பாடலையும் கொடுத்திருக்கிறார்.

’பிக் புல்’ பாடலில் மணி ஷர்மாவின் இசை வைப் & எனர்ஜிட்டிக்காக உள்ளது. இதன் காட்சிகளும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. ஹை எனர்ஜியில் கொண்டாட்டமான சூழ்நிலையில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை ஒன்றாக இதில் கொண்டு வருகிறது. காவ்யா தாப்பரும் இந்தப் பாடலுக்கு இன்னும் வண்ணம் சேர்த்துள்ளார். இவர்கள் அனைவரின் நடனமும் பார்வையாளர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும். பாஸ்கரபட்லா ரவி குமாரின் வரிகள் ’பிக் புல்’ பாடலுக்கு வலு சேர்த்துள்ளது. ப்ருத்வி சந்திரா மற்றும் சஞ்சனா கல்மான்ஜே ஆகியோர் இந்தப் பாடலை பாடியிருக்கிறார்கள்.

பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஆகியோர் படத்திற்கு அற்புதமான ஒளிப்பதிவு செய்துள்ளனர். ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

நடிகர்கள்: ராம் பொதினேனி, சஞ்சய் தத், காவ்யா தாப்பர், அலி, கெட்அப் ஸ்ரீனு மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: பூரி ஜெகன்நாத்,
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கவுர்,
பேனர்: பூரி கனெக்ட்ஸ்,
உலகளாவிய வெளியீடு: பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட், நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி,
தலைமை செயல் அதிகாரி: விசு ரெட்டி,
இசை: மணி ஷர்மா,
ஒளிப்பதிவு: சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி,
ஸ்டண்ட் டைரக்டர்: கெச்சா, ரியல் சதீஷ்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா,
மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா