பிளாக்பஸ்டர் படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம், எஸ்டோனியாவில் நடைபெறும் ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்!

சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தால் (FIAPF) அங்கீகரிக்கப்பட்ட ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவாக வகைப்படுத்தப்பட்ட எஸ்டோனியாவில் நடைபெறும் தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழா, அதன் 29வது பதிப்பை எஸ்டோனியாவின் தாலினில் நிறைவு செய்தது.

இந்த ஆண்டு தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமான முதல் சிறப்புப் போட்டி நடுவர் குழுவில் பணியாற்ற பிளாக்பஸ்டர் ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம் நியமிக்கப்பட்டார். இளங்கோ ராமின் திரைப்படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) 2023 ஆம் ஆண்டு தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்டு சிறப்பு நடுவர் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போட்டிப் பிரிவில் நடுவர் குழு உறுப்பினராக 2025 இல் அவர் நியமிக்கப்பட்டிருப்பது கெளரவமாகும்.

இந்த ஆண்டு தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழு 9 முக்கிய விருது பிரிவுகளில் முடிவுகளை அறிவித்தது.

FIAPF ஆல் ஏ- லிஸ்ட் திரைப்பட விழாவாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர், தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவில் நடுவர் குழுவில் பணியாற்றும் முதல் இலங்கையர் என்ற பெருமையையும் இளங்கோ ராம் பெற்றுள்ளார் என்பது மகிழ்ச்சிமிக்க தருணமாகும்.

Related posts:

ரூ.740 கோடி மோசடி ? ரான்பாக்ஸி மாஜி தலைவர்கள் கைது.!

நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் சங்கீதா கிருஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் பைலிங்குவல் ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ள...

விஜய் ஆண்டனி நடிக்கும் 'நூறு சாமி' திரைப்பட வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு!

மிகவும் எதிர்பார்க்கப்படும் 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் மே 22 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!

'வீர தமிழச்சி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் !

'கலர்ஸ் ஆஃப் கோலிவுட்', எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவுக்கு அதிகாரப்பூர்வ தே...