பால் விலையை அடுத்து தயிர், நெய் விலையையும் உயர்த்தியது ஆவின்…!

ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, தயிர், நெய், பால்கோவா போன்ற பால் உப பொருட்களுக்கான விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

பசும்பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியும், எருமைப் பால் கொள்முதல் விலையில் 6 ரூபாய் உயர்த்தியும் தமிழக அரசு அறிவித்தது. கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட காரணத்தால் ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலையும் அதிகரிக்கப்பட்டது. விலை உயர்வானது கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில், பால் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, அதன் உப பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி ஒரு லிட்டர் நெய்யின் விலை 460 ரூபாயில் இருந்து 495 ரூபாயாகவும், ஒரு கிலோ பால் பவுடர் 270 ரூபாயில் இருந்து 320 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பனீர் இனி 450 ரூபாய்க்கு விற்கப்படும். 230 ரூபாய்க்கு விற்பனையான அரை கிலோ வெண்ணெய் விலையில் 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பால்கோவாவின் விலையில் 20 ரூபாயை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பால்கோவா இனி 520 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் டிலைட் பால் அரை லிட்டர் விலை 26 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும், நறுமண பாலின் விலை அரை லிட்டருக்கு 22 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரை லிட்டர் தயிர் விலையை 25 ரூபாயில் இருந்து 27 ரூபாயாக ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. பால் உப பொருட்களுக்கான விலை உயர்வானது புதன் கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

எம்.ஆர்.ராதாவை திராவிட இயக்கங்கள் மறந்துவிட்டது? நடிகர் ராதாரவி குற்றச்சாட்டு !
இந்தியாவில் ரூ.4,999 விலையில் 32 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்.இ.டி. டி.வி. அறிமுகம் !
பெந்தகோஸ்தே சபைகளின் யேசு வியாபாரம் ?
கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் ? அபிக்யா ஆனந்த் கணிப்பு.!
இந்திய தொழிலாளர் நலச் சட்டங்கள் ? மாற்றுவது நன்மை பயக்குமா?
குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றசா...
தாய் நாட்டின் விடுதலைக்காக மருது பாண்டியர்களின் வீர மரணம் !
சீனாவை விட்டு வெளியேறும் பெரிய நிறுவனங்கள்! ஜப்பான் நிவாரண நிதி !!