பள்ளிக் கல்வியில் மாற்றம் வருமா? மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு தருமா?

இந்தியாவில் உள்ள 14 லட்சம் பள்ளிகளில் , அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 20 லட்சம் குழந்தைகளும் , மற்ற அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 38 லட்சம் குழந்தைகளும் கல்வி கற்பதாக , பள்ளிக் கல்விக்கான ‘ ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு அறிக்கை – 2016-2017ம் ஆண்டில் தெரிவித்திருக்கிறது. இந்த கல்வி ஆண்டில் இன்னும் அதிகமாக இருக்கும்.

இந்திய மக்கள்தொகையில் சுமார் 29 சதவீதம் பேர் குழந்தைகள் . 6 முதல் 14 வயதுக்குட்பட்டோர் 20 சதவீதம் பேர் . இவர்கள் ‘ கல்வி உரிமை சட்டம் – 2009 ‘ – ன்படி கல்வி கற்க உரிமை பெற்றவர்கள் . கல்வி உரிமை சட்டம் 2009 , கல்விக்கான விழிப்புணர்வையும் குழந்தைகளைப் பயிற்றுவிப்பதற்கான விருப்பத்தையும் உருவாக்கியது . இருந்தாலும் 2014 – ஆம் ஆண்டின் ‘ பள்ளிக் கல்வி பெறாத குழந்தைகள் குறித்த தேசிய மாதிரி ஆய்வறிக்கை என்ன சொல்லுதுன்னா இன்னும் ஆறு மில்லியன் ( அறுபது லட்சம் ) குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கே வரவில்லை என்று தெரிவிக்கிறது . இயற்கைப் பேரிடர் காலங்களில் , பள்ளிக் கட்டடங்களுக்கும் பள்ளிகளை இணைக்கும் சாலைகளுக்கும் சேதம் உண்டாகிறது . பள்ளிக்கூடத்தை புனர்வாழ்வு மையமாக மாற்றுவதனால் , பள்ளியை மீண்டும் திறப்பதில் நிச்சயமற்ற தன்மை ஏற்படுகிறது . பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களின் வருகை நிச்சயம் குறையும்.

இந்தியாவில் நூறு நகரங்களில் 76 நகரங்கள் , வெள்ளம் , பூகம்பம் , புயல் இவற்றில் ஏதாவது ஒன்றினாலோ அல்லது இவை மூன்றினாலுமோ பாதிப்புக்குள்ளாகும் மண்டலங்களில் இருப்பதாக இயற்கைப் பேரிடர் மேலாண்மை குறித்த ஓர் ஆய்வு சொல்லுது . இந்தியாவில் கல்வி உரிமை சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கமே, ஆரம்பக் கல்வியில் தரம் மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்தி ஒரு நெறிமுறையான கட்டமைப்பை உருவாக்குவதாகும் . இச்சட்டம் இயற்றப்பட்டு பதினொரு ஆண்டுகளாகியும் 12 % பள்ளிகளில் மட்டுமே பாதுகாப்பான குடிநீர் , தூய்மையான கழிப்பறைகள் , கை கழுவும் வசதி , தடையில்லா மின்சாரம் மற்றும் காற்றோட்டமான வகுப்பறைகள் உள்ளன . மாணவர்களின் வசிப்பிடத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்திற்குள் பள்ளி இருக்க வேண்டும் என்பது கல்வி உரிமை சட்டத்தின் ஒருங்கிணைப்புக் கொள்கை . ஆனா இருக்கான்னு கேட்டா இல்லைன்னு தான் பதில் வரும்.பல மாநிலங்களில் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருவதன்மூலம் , இக்கொள்கை கைவிடப்பட்டு
விட்டதுன்னு தெரியுது. இந்த கொரோனா பாதிப்பால் பள்ளிகளை மீண்டும் திறப்பது என்பதும் அவற்றின் உள்கட்டமைப்புகளை மறு சீரமைப்பு செய்வதும் பெரிய சவாலாக இருக்கும்.இதெல்லாம் பள்ளிக் கல்வியின் வளர்ச்சியைத் தான் பாதிக்கும்.

கல்வி பாதுகாப்பு சட்டத்தின் முதன்மை கண்காணிப்பு நிறுவனம்  கடந்த ஆண்டு 5,000 புகார்களுக்கு தீர்வு கண்டது . இந்தாண்டின் தொடக்கத்தில் புகார்களின் எண்ணிக்கை குறைந்திருந்தபோதிலும் , கடந்த மார்ச் மாதம் முதல் புகார்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது . கொரோனா நோய்த்தொற்று , உலக அளவில் பள்ளிக் கல்விக்கு பல சவால்களை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல . ‘ ஒரே நாடு ‘ என்ற முழக்கத்தினை முன்மொழிகின்ற இந்திய அரசாங்கம் , புதிய கல்விக் கொள்கை வரைவினில் பள்ளி பாடங்களை மறுபரிசீலனை செய்ய முன்வந்துள்ளது . பள்ளிக்கு வராமல் கல்வி கற்பிக்கப்படுவது , குழந்தைகளின் கல்வியில் , குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ளவர்களின் குழந்தைகள் கல்வியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் . பள்ளிக்கூடத்திற்கு வெளியே ஆன்லைன் மூலம் படிக்கிறது என்பது , பள்ளி அமைப்புகளிலிருந்து குழந்தைகளை அந்நியப்படுத்துவதற்கும் , ஏற்கனவே உள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்வதற்கும் மட்டுமே உதவும் . இயற்கைப் பேரிடரால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் நகர்ப்புறத்திலிருந்து கிராமப்புறங்களுக்கு குடிபெயரும்போது , அவர்களின் குழந்தைகள் பள்ளிப் படிப்பைத் தொடர்வதில் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

இந்திய பள்ளிக் கல்வித் துறையில் 11 லட்சம் ஒப்பந்த ஆசிரியர்கள் உள்ளனர் . பிகார் , தில்லி போன்ற பல மாநிலங்களின் ஆசிரியர்களுக்கு , கொரோனா நோய்த்தொற்று பரவுவதற்கு முன்பிருந்தே ஊதியம் வழங்கப்படவில்லை . எனினும் , இம்மாநிலங்களில் உள்ள பல பள்ளிகள் பேரிடர் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டபோது அனைத்து ஆசிரியர்களும் இரவு பகல் பாராமல் மக்கள் பணி ஆற்றினர் . பள்ளிகள் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியுடன் , சமூகப் பாதுகாப்பு , ஊட்டச்சத்து , சுகாதாரம் இவற்றோடு உணர்வுபூர்வ ஆதரவையும் வழங்குகிறது . பொருளாதார வல்லுநர்களின் மதிப்பீட்டின்படி , ஏழைக் குடும்பங்களின் வருமானத்தில் 75 % உணவுக்காக செலவிடப்படுகிறது . இச்சூழலில் சுமார் 9 கோடி இந்திய குழந்தைகளுக்கு பள்ளிகள் மூடியிருப்பதால் மதிய உணவு கிடைக்கவில்லை என்கிறது ஒரு ஆய்வு .பொது முடக்கக் காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது . இதனை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும் என்று வழக்குரைஞர்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறாங்க. குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக இருப்பது பள்ளிகள்தான்னு இது தெரிய வருது .

குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறுவதற்கான முக்கிய காரணியாக , பொருளாதாரப் பிரச்னையையே சுட்டிக் காட்டுகிறது தேசிய மாதிரி கணக்கெடுப்பு அறிக்கை . கொரோனா நோய்த்தொற்று பள்ளிக் கல்வியில் ஏற்படுத்திய மிகப்பெரும் மாற்றங்களில் ஒன்று ஆன்லைன் கல்வி . இது தவிர்க்க முடியாதுன்னாலும் , ஏழைக் குடும்பத்தின் குழந்தைகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் . கொரோனா பரவலும் அதனால் ஏற்படுத்தப்பட்ட பொது முடக்கமும் 14 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் , அமைப்புசாரா துறையில் பணிபுரிவோரையும் பெரிதும் பாதித்துள்ளன . பல அடுக்குநிலை மனிதர்கள் வாழும் இந்தியாவில் , கல்வி நிலையங்கள் இல்லாமல் தொழில் நுட்ப முறையில்தான் கல்வி என்ற நிலை ஏற்பட்டால் , விளிம்புநிலை மக்களின் குழந்தைகள் பலர் பள்ளிக் கல்வியில் இருந்து விலக நேரிடும் என்பதே கசப்பான உண்மை . புதிய கல்விக் கொள்கைல இந்த பிரச்சினை களுக்கு தீர்வு கிடைக்குமா? என்ன செய்யப் போகிறது மத்திய மாநில அரசுகள்?