பப்பி – விமர்சனம் !

மிகவும் சீரியஸ் படங்களாக பார்த்து வந்த நம்ம தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக மிகவும் யூத்தான ஒரு கதைக்களத்தோடு ரசிகர்களை”பப்பி” திரைப்படம் மூலம் மகிழ்வித்துள்ளார் அறிமுக இயக்குனர் நட்டு தேவ். படத்தின் கதாநாயகன் வருண் சில திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.அவரின் யதார்த்தமான ஒரு யூத்துக்கு உண்டான துள்ளலோடு சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு திரையுலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.ட்ரைலர் பார்த்த பலர் இது ஒரு அடல்ட் படம் போல் இருக்கும் என்ற எண்ணம் இருந்திருக்கலாம் ஆனால் உண்மையில் இது ஒரு நல்ல லவ் சென்டிமெண்ட் கலந்த காமெடி படம்.

இப்படத்தின் கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இவர் கன்னட படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே பிலிம்பேர் சிறந்த துணை நடிகைக்கான விருதை தட்டி சென்றவர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.காமெடி கலந்த சென்டிமெண்ட் படத்தில் கலக்கியுள்ளார் யோகி பாபு என்றே சொல்ல வேண்டும். அவர் கிட்ட தட்ட அனைத்து படங்களிலும் நடித்தாலும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே அவரின் காமெடியை ரசிக்க முடியும். ஆனால் இப்படத்தில் அவர் படம் முழுக்கு நம்மோடு நகர்கிறார். அப்படிஎன்றால் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க கூடிய ஒரு படம். ஒவ்வொரு இளைஞரும் தங்களது இளமை பருவத்தில் நடந்த விஷயங்களை இப்படத்தோடு ஒப்பிட்டு பார்த்து கொள்ளும் வகையில் இளமை பருவத்திற்கு இழுத்து செல்கிறது.நாய்க்குட்டி ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளது. நாய்க்கும் உயிர் இருக்கிறது. அதை நாம் மதிக்க வேண்டும் என்று மிகவும் சென்டிமெண்டாக படத்தை நகத்துகிறார் இயக்குனர். இடைவேளைக்கு பிறகு மிக மிக அற்புதம். சென்டிமென்டிற்கு குறைவே இல்லாமல் நம்மை கட்டிபோடுகிறார்கள். தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக் குமார் பாதே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கிளைமாக்ஸ் சூப்பர். திரையரங்குகளில் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இளமையான யூத்தான இப்படம் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும். இருப்பினும் குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய படம் என்று தான் எல்லோரும் சொல்லுகிறார்கள்.பப்பி என்ற டைட்டில் – பள்ளி பருவத்தில் வரும் பப்பி லவ் பற்றிய கதை என்றும் சிலர் பப்பி என்றால் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளின் பெயர் அதனால் பிராணிகளின் கதை என்றும் சொல்லி குழம்பி கொண்டு இருக்கின்றனர். எல்லாம் கலந்த ஒரு ஜனரஞ்சகமான படம் தான் பப்பி.

More PUPPY News