நடிகை நயன்தாரா நடிக்கும் ‘லேடிசூப்பர் ஸ்டார் 75’*

ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் வழங்கும்,
நீலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில்
நடிகை நயன்தாரா நடிக்கும் ‘லேடிசூப்பர் ஸ்டார் 75’*

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தினை இயக்குநர் ஷங்கரின் முன்னாள் உதவியாளரான நீலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். மேலும் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

ஃபேமிலி என்டர்டெய்னர் படமான இது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் இருக்கும். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை, படக்குழுவினர் சென்னையில் நடத்தி முடித்து விட்டனர். மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பானது திருச்சியிலும், சென்னையின் சில பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படமானது இதுவரை நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்தப் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts:

நடிகர் சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

"’ஜமா’ எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களைத் தந்து, என் நடிப்பை மேம்படுத்தியிருக்கிறது"- நடிகை அம்மு அபிராமி!

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ந...

பரோடா வங்கியின் உழவர் திருவிழா இருவார கொண்டாட்டம் !

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'தி சோழா டைகர்ஸ்: அவெஞ்சர்ஸ் ஆஃப் சோம்நாத்' புத்தகத்தை புகழ்பெற்ற எழுத்தாளர் அமிஷ், ஒடிஸி சென்னை அடையாறில் வெளியிட்டார்!

தி நகரில் அனைத்து வங்கிகள் சார்பில் வாடிக்கையாளர் மேம்பாட்டு முயற்சி முகாம் !