தீம் பார்க்கில் தடம் பதித்த தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சினிமா குடும்ப பொழுதுபோக்கு இடமான ’ஜாலிவுட்’ பிரம்மாண்டமாக பெங்களூரு நகரில் தொடங்கியுள்ளது. விருந்தினர்களை மகிழ்விக்கும் வகையில் ‘ஜாலிவுட்’ குழுவின் நடனத்துடன் இந்த நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்வில் கர்நாடக துணை முதல்வர் ஸ்ரீ டி.கே. சிவக்குமார், புகழ்பெற்ற நடிக டாக்டர். சிவ ராஜ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ டி.கே.சுரேஷ், ஸ்ரீபாலகிருஷ்ணா எம்.எல்.ஏ., திரு.எச்.ஏ.இக்பால் ஹுசைன் எம்.எல்.ஏ., மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தனர்.

ஜாலிவுட்டின் சேர்மனான டாக்டர். ஐசரி கே கணேஷ், விழாவை சிறப்பித்த அனைத்து பிரமுகர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். தனது பயணத்தைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக தனது கனவுகள் மீதான நம்பிக்கை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் இடைவிடாத கடின உழைப்பு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டார்.
விருந்தினர்கள் அனைவரும் ஜாலிவுட்டின் வெற்றிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பெயர் போன பெங்களூரு நகரத்தில் நிச்சயம் இந்த ஜாலிவுட் அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும், டைட்டானிக், தி லாஸ்ட் வேர்ல்ட் மற்றும் ஐரோப்பிய பின்னணியிலான தெரு, ரோமன்சியா, பல்வேறு நீர் பூங்காக்கள் மற்றும் கடல் அலைகளைக் கொண்ட குளம் போன்ற ஜாலிவுட்டின் சிறப்பம்சங்கள் பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தது. இதுமட்டுமல்லாது, இங்கிருக்கும் பலதரப்பட்ட உணவு வகைகளும் மக்களை சுவை தரத்தை கூட்டும் விதமாக அமைந்துள்ளது. ஆகமொத்தத்தில், புதுமையான சினிமா அனுபவத்தை தேடுபவர்களுக்கான பொழுதுபோக்கு களமாக ‘ஜாலிவுட்’ அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Related posts:

திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசனின் 'டிராப் சிட்டி' மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு!
'பிழை' - பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இது ஒரு பாடம் !
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், மாஸ் நடிகர் என்டிஆர், பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அடுத்து இணையும் ஆக்‌ஷன் திர...
'அந்தகன்' பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா.!
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் !
நாட்டிலேயே அதிகமாகப் பார்க்கப்பட்ட சேனலாக மாறிய தூர்தர்ஷன் !
நில உச்சவரம்பு சட்டப்படி 16ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க கூடாது ? கூடுதல் நிலம் அரசால் கையகப்படுத்தப்படும். ?