தமிழகத்தில் 24 ரயில்களை தனியார்கள் இயக்க போகிறார்கள்..?

151 ரயில்களை தனியார்கள் இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதிஅளித்துள்ளது இதில் தமிழகத்தின் பல்வேறு வழித்தடங்களில் 24 ரயில்களை தனியார்கள் இயக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால கட்டணங்கள் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. நாட்டில் உள்ள 109 வழித்தடங்களில் 151 நவீன ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டத்தில் தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பங்களை ரயில்வே அமைச்சகம் வரவேற்று உள்ளது.

35 கோடி மதிப்புள்ள இத்திட்டம் நிறைவேற்றப்பபட்டு 2023ம் ஆண்டு ஏப்ரலில் நாடு முழுவதும் தனியார் ரயில்கள் ஓடும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளது என்றும் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான கட்டணம் விமானம் போக்குவரத்துக்கு இணையாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழத்தில் பல்வேறு வழித்தடங்களில் 24 தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அவற்றின் சில விவரங்களை பார்ப்போம் 2023 ஏப்ரல் முதல் தனியார் ரயில்கள் ஓடும்.. விமானங்களுக்கு இணையான கட்டணம்.. ரயில்வே இரு வழிகளில் இயக்கப்பட உள்ள தனியார் ரயில்கள் சென்னை – மதுரை புதுச்சேரி – செகந்திராபாத் (வழி சென்னை) சென்னை – கோவை சென்னை திருநெல்வேலி திருச்சி – சென்னை சென்னை- கன்னியாகுமரி கன்னியா குமரி – எர்ணாகுளம் சென்னை – புதுடெல்லி, சென்னை – ஹவுரா சென்னை – புதுச்சேரி மங்களூர் – சென்னை (வாராந்திர ரயில்) சென்னை – மும்பை (வாரம் இருமுறை) கொச்சுவேலி – கவுஹாத்தி (வாரத்தில் மூன்று நாட்கள்) மேற்கண்ட ரயில்களை தனியார் இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய ரயில்வே, தனியார் மூலம், 151 நவீன ரயில்களை, 109 வழித்தடங்களில் இயக்க முடிவு செய்துள்ளது. இதற்கு தகுதியுள்ள நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று, இந்திய ரயில்வே வாரிய தலைவர், வி.கே.யாதவ், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: வரும், 2023 ஏப்ரல் முதல், தனியார் ரயில் போக்குவரத்தை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே தனியார் மயமாக்கப்படுவதாக கருத வேண்டாம். 2,800 ரயில் சேவையில், 5 சதவீதம் மட்டுமே தனியாருக்கு அளிக்கப்படும். தனியார்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தி, சேவையை மேற்கொள்ள வேண்டும். விமானம், சொகுசு பஸ் கட்டணங்களின் அடிப்படையில், தனியார் ரயில் கட்டணம் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும்.

மேலும், ரயில் தடம், ரயில் நிலையங்கள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பயன்படுத்த, தனியாரிடம் கட்டணம் வசூலிக்கப்படும். வருவாயில் குறிப்பிட்ட பங்கை, இந்திய ரயில்வேக்கு வழங்க வேண்டும். ரயில்களை குறித்த நேரத்தில் இயக்கும் விதியை கடைப்பிடிக்க வேண்டும். தவறினால், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தனியார் ரயில்கள் மூலம், குறைந்த செலவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில், மிகச் சிறப்பான சேவையை பயணியர் பெற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இந்தியாவில் தனியார் ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள, பம்பார்டியர் இந்தியா, அதானி போர்ட்ஸ், டாடா ரியாலிட்டி, பிரான்சின், அல்ஸ்தாம், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, டல்கோ, மெக்குயர் குழுமம் ஆகியவை ஆர்வமாக உள்ளன.

Related posts:

லாக் டவுன் முடிந்ததும் 15 ந் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படுமா? ரயில்வே பதில் !
15 ஆண்டுகளுக்கு பின்னர் ரெயில் நிலையங்களில் மீண்டும் மண் குவளைகள் !
சென்ட்ரல் மெட்ரோ நிலையம், பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள நிலையங்களில், ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையம் !
ரயில் பயணிகளின் வருவாயில் ரூ.155 கோடியும், சரக்கு போக்குவரத்து வருவாயில் ரூ.3,901 கோடியும் குறைந்துள்ளது.?
நீண்டகால குத்தகைக்கு 84 ஏக்கரை ஏலம் விடுகிறது தமிழக ரயில்வே !
24 வழித்தடங்களில் தனியார் ரயில் சேவை ?
தேஜஸ் ரயிலில் பயணிக்கும் போது வீட்டில் திருட்டு போனால் ஐ.ஆர்.சி.டி.சி ரூ 1,00,000 இழப்பீடு !
ரயில்களின் முன்பதிவு கட்டுப்பாடுகள் தளர்வு ...! மக்கள் மகிழ்ச்சி !!!