தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேலையை இழந்தால் உதவித்தொகை வழங்கப்படும் !

தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் எந்தவொரு காரணத்திற்காகவும் தங்கள் வேலையை இழந்தால் அல்லது வேலையில்லாமல் போனால் தற்போது கவலைப்பட வேண்டியதில்லை. மத்திய அரசின் ‘அடல் பிமிட் வியாகி கல்யாண் யோஜ்னா’ திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று தொழிலாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ.சி) அறிவித்துள்ளது. இதன்படி தனியார் துறையில் வேலை பார்க்கும் ஒருவர் வேலையை இழந்தால் மத்திய அரசாங்கம் அவருக்கு 24 மாதங்களுக்கு அதாவது 2 ஆண்டுகளுக்கு மாத ஊதியம் வழங்கப்படும். இது தொடர்பாக ESIC(தொழிலாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்) ஞாயிற்றுக்கிழமை தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் வலைத்தள பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதைப்பெற விண்ணப்பிப்பது எப்படி?

நீங்கள் ESICன் வலைத்தள பக்கத்தில் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதை நிரப்பிய பிறகு, நீங்கள் அதை ESIC இன் எந்த கிளைக்கும் சமர்ப்பிக்கலாம். இந்த படிவத்துடன் ‘நோட்டரி பப்ளிக்’ கையெழுத்துடன் ரூ.20 மதிப்புள்ள முத்திரைத்தாள் அதில் ஏபி -1 முதல் ஏபி -4 வரை படிவம் சமர்ப்பிக்கப்படும். இருப்பினும், இதற்காக ஆன்லைன் வசதியும் தொடங்கப்பட உள்ளது. மேலும் தகவலுக்கு, நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை ( www.esic.nic.in ) பார்வையிடலாம். குறிப்பிடத்தக்க வகையில், இந்த திட்டத்தை நீங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ESIC உடன் காப்பீடு செய்யப்பட்ட எந்தவொரு நபரும் குற்ற நடவடிக்கைகள் காரணத்திற்காக நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அல்லது அந்த நபர் மீது எந்தவொரு குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டால், அவர்கள் இந்த திட்டத்தின் பலனைப் பெற மாட்டார்கள். இது தவிர, தன்னார்வ ஓய்வூதியம் (வி.ஆர்.எஸ்) எடுப்பவர்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் பலன் கிடைக்காது